சிவராத்திரியில் புலிகளுக்கு அசைவ உணவு – ஏபிவிபி கண்டனம் என பரவும் நையாண்டி! உண்மை என்ன?
மகா சிவராத்திரியன்று புலிகளுக்கு அசைவ உணவு கொடுத்த உயிரியல் பூங்கா மீது ஏபிவிபி அமைப்பினர் தாக்குதல் என்ற செய்தி பரவலாக சமூக ஊடகங்கமான இன்ஸ்டாகிராம், X தளத்தில் வெகுவாக பரப்பப்பட்டது.;

மகா சிவராத்திரியன்று புலிகளுக்கு அசைவ உணவு கொடுத்த உயிரியல் பூங்கா மீது ஏபிவிபி அமைப்பினர் தாக்குதல் என்ற செய்தி பரவலாக சமூக ஊடகங்கமான இன்ஸ்டாகிராம், X தளத்தில் வெகுவாக பரப்பப்பட்டது. இதனை ஆய்வுச் செய்தப்போது, இச்செய்தியில் உண்மை இல்லை. வெறும் கேலிக்கை நோக்கில் பகிரப்பட்ட ஒன்று என்பது அறிய முடிந்தது.
சமூக ஊடகங்களில், “The Savala Vada” என்ற பக்கத்திலிருந்து ஒரு செய்தி வைரலாக பரவி வருகிறது. அந்த செய்தியில், “சிவராத்திரி அன்று புலிகளுக்கு அசைவ உணவு வழங்கியதைக் கண்டித்து ABVP அமைப்பினர் மிருகக் காட்சி சாலையை தாக்கினர்” என்று கூறப்பட்டுள்ளது.

இதேபோல் X தளத்தில் பகிரப்பட்ட வேறொரு பதிவின் விவரத்தினை இங்கே காணலாம். அப்பதிவில் “அடப்பாவிகளா.. ஏபிவிபி சங்கிகள் சிவராத்திரியன்று புலிகளுக்கு அசைவ உணவு வழங்கியதாகக் கூறி மிருகக் காட்சி சாலையைத் தாக்கினர். இதெல்லாம் உலகில் வேறு எங்காவது நடக்குமா...சங்கி முட்டாள்கள் இயற்கைக்கு எதிரானவர்கள்..!” என்ற தகவல் பகிரப்பட்டிருந்தது.
உண்மை சரிபார்ப்பு:
இந்த செய்தியை தெலுங்குபோஸ்ட் உண்மை சரிபார்ப்பு குழு ஆய்வு செய்தது. அந்த செய்தித்தாள் வடிவத்தில் உருவாக்கப்பட்டிருந்த புகைப்படத்தின் குறிப்பிடப்பட்டிருந்த “The Savala Vada” என்ற சமூக ஊடகக் கணக்கை ஆராய்ந்தபோது, அந்த புகைப்படத்தின் இடதுபுறத்தில், “This might be satire” என்று குறிப்பிடப்பட்டிருந்தது. அதாவது, “இது கேலிக்கையாக இருக்கலாம்” என்பது அதன் அர்த்தம். இதன் மூலம், இது உண்மையான செய்தி அல்ல, நையாண்டி செய்தியாக உருவாக்கப்பட்டது என்பதனை புரிந்து கொள்ள முடிகிறது.
“The Savala Vada” என்று பெயர் தலைப்பாக இருந்தது. இந்த பெயரைக் கொண்டு Google Search மூலம் தேடினோம். அப்போது அந்தப் பக்கத்தில் பல்வேறு அரசியல் சம்பவங்களை நகைச்சுவையாக கேலிச் செய்திகளாக வெளியிட்டு இருப்பதைக் காண முடிந்தது. கேலிக்கையாக செய்தி பகிரும் ஒரு சமூக ஊடக கணக்கு என்பது உறுதியாகிறது. இது ஒரு நகைச்சுவை மற்றும் நையாண்டி செய்தி பக்கம் என்பதால், அதன் உள்ளடக்கங்களை உண்மை செய்திகளாகக் கருதுவதில் அர்த்தம் இல்லை.
இதற்கிடையில் “Business Standard” பத்திரிகை, 26 பிப்ரவரி 2025 அன்று வெளியிட்ட ஒரு செய்தியில், புதுதில்லியில் உள்ள South Asian University-யில் சிவராத்திரி அன்று அசைவ உணவு வழங்கப்பட்டதை எதிர்த்து ABVP நிர்வாகிகள் தகராறு செய்ததாகவும், அப்போது மாணவர்களும் உணவக ஊழியர்களும் தாக்கப்பட்டதாகவும் தகவல் வெளியிட்டுள்ளது. இதே செய்தியை “The Times of India” (அதன் இணைப்பு: https://timesofindia.indiatimes.com/india/students-attacked-ruckus-at-south-asian-university-as-abvp-vs-sfi-clash-over-food-menu/articleshow/118583587.cms) பத்திரிக்கையும் பகிர்ந்துள்ளது.அச்செய்திலும் தென் ஆசியப் பல்கலைக்கழக்கத்தில் மாணவர்களுக்கும் உணவக ஊழியர்களுக்கும் இடையே ஏற்பட்ட மோதலைப் பற்றிய தகவல்களே இருந்தன.
இதில், Students’ Federation of India (SFI) அமைப்பினர், ABVP அமைப்பினர் மாணவர்களிடம் வன்முறை மேற்கொண்டதாக குற்றம் சாட்டியுள்ளனர். இதன் அடிப்படையில், South Asian University-யில் நடந்த உண்மை சம்பவத்தைக் கேலிச் செய்யும் நோக்கில் போலியான தகவல்கள் பகிரப்பட்டு வருகிறது என்பதனை அறியலாம். இச்சம்பவத்தை தொடர்ந்து பல்வேறு செய்திகள் அசைவ உணவுமுறை, மக்கள் உணவு பழக்கங்கள் என பலதரப்பட்ட விவாதங்கள் முன்வைக்கப்படுகின்றன. மாணவ அமைப்பினரின் செயல்பாடுகளையும் கேலிக்கையாகப் பகிரும் நோக்கத்தில் பல மாற்றியமைக்கப்பட்ட புகைப்படங்களும் வைரலாக பரவி வருகிறது. நகைச்சுவையாக இருப்பினும் மாணவர்களிடம் வேற்றுமையை உண்டாக்கும் இத்தகைய போலித் தகவல்கள் வெறுப்புணர்ச்சியைத் தூண்டவும் செய்கிறது. எனவே இதுபோன்ற நையாண்டிச் செய்தியிலும் தவறான தகவல்கள் பகிரப்படுகின்றது.
முடிவு : நாங்கள் மேற்கொண்ட உண்மைதன்மை ஆய்வின் அடிப்படையில், “சிவராத்திரி அன்று புலிகளுக்கு அசைவ உணவு வழங்கியதால் ABVP அமைப்பினர் மிருகக் காட்சிசாலையைத் தாக்கினர்” எனக் கூறப்படும் தகவல் வெறும் நையாண்டி செய்தி என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.
ஆனால், South Asian University-யில் சிவராத்திரி அன்று உணவுப் பரிமாறல் தொடர்பாக நடந்த வன்முறை உண்மைச் செய்தி. இந்த செய்தியில் மாற்றியமைக்கப்பட்ட புகைப்படம் பயன்படுத்தப்பட்டுள்ளது. அதன் மூலப் படம் தெற்காசிய பல்கலைக் கழகத்தில் நடந்த சம்பவம் பற்றியது. அச்சம்பவத்தினை தொடர்ந்து உணவு அரசியல் குறித்து பல்வேறு செய்திகளும் தகவல்களும் சமூக ஊடகங்களில் தொடர்ந்து வெளிவருகின்றன.
எனவே, சமூக ஊடகங்களில் பரவும் எந்த தகவலையும் பகிர்வதற்கு முன், அதன் உண்மைத்தன்மையை சரிபார்ப்பது மிக முக்கியம்.