சுந்தர் பிச்சை உண்மையில் இந்தியில் பேசினாரா? காணொளியின் பின்னணி !

கூகுள் தலைமை நிர்வாகி சுந்தர் பிச்சை இந்தியில் நன்றாக பேசுவார்;

Update: 2025-03-19 08:35 GMT
Sundar Pichai really speak Hindi
  • whatsapp icon

கூகுள் தலைமை நிர்வாகி சுந்தர் பிச்சை அவர்களுக்கு இந்தி மொழி தெரியாது. ஆனால் அவர் சாதித்து இருக்கிறார் என்று தமிழ்நாட்டின் அரசியல் தலைவர்கள் சுந்தர் பிச்சையை குறிப்பிட்டு மும்மொழி கொள்கைக்கு எதிராக குரல் எழுப்பி வரும் நிலையில், சுந்தர் பிச்சை இந்தியில் உரையாடியது போன்ற ஒரு காணொளி சமூக ஊடகங்களில் வைரலாக பரவி வருகின்றது. தற்போதைய அரசியல் சூழலில் இதுபோன்ற முரனான செய்திகளால் ஏற்படும் தாக்கத்தை உணர்ந்து தெலுங்கு போஸ்ட் குழு சார்பில் ஆய்வு செய்தோம்.

சமூக ஊடகங்களில் பரவும் செய்தியின் விவரம்:

கூகுள் நிர்வனத்தின் தலைமை நிர்வாகியான சுந்தர் பிச்சை அவர்களுக்கு இந்தி தெரியாது என்று கூறியதாக தமிழ்நாடு அமைச்சர் பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன் அவர்கள் கருத்து வெளியிட்ட காணொளி காட்சியும், மற்றும் சுந்தர் பிச்சை அவர்கள் இந்தியில் பேசுவது போன்ற காணொளியும் ஒன்றாக இணைத்து சமூக ஊடகங்களில் பதிவிட்டுள்ளனர்.

அந்த சமூக ஊடகப் பதிவுகளில், “இருமொழிக் கல்வி படித்த கூகுல் தலைவர் சுந்தர் பிச்சைக்கு ஹிந்தி தெரியாது” – பி.டி.ஆர்

இவ்வளோ அழகா இந்தி பேசும் சுந்தர் பிச்சை படித்தது மூன்று மொழி கொள்கை, அந்த தனியார் பள்ளிக்கூடம் பெயர் “ஜவகர் வித்யாலயா CBSE பள்ளி” என்று குறிப்பிடப்பட்டிருந்தது. இந்த காணொளியினை பலரும் சமூக ஊடகங்களில் பதிவிட்டு வருகின்றனர்.

X தளத்தில் உலாவும் பதிவுகளின் விவரத்தினை கீழே காணலாம்




உண்மை சரிப்பார்ப்பு:

சுந்தர்பிச்சை இந்தியில் பேசுவது போன்ற காணொளியினை பதிவிட்டு, அவருக்கு இந்தி தெரியாது என கூறியது தவறு என்று சிலர் சமூக ஊடகங்களில் தமிழ்நாடு அரசு, அரசியல் தலைவர்கள் மற்றும் அமைச்சர்களை விமர்சித்து வருகின்றனர். இத்தகவலை தெலுங்கு போஸ்ட் உண்மை சரிப்பார்ப்பு குழு ஆய்வு செய்தது.

முதலில் வைரலாகும் காணொளியினை கவனமாக பார்த்தால், அதில் சுந்தர் பிச்சையின் வாய் அசைவிற்கும், அவர் பேசிய வார்த்தைகளுக்கு பொருந்தவில்லை. அதனால் அந்த காணொளி ஆய்வு செய்தப்போது, சுந்தர் பேசும் ஒலியினை மட்டும் மாற்றியிருப்பது தெரிகிறது. இதை உறுதி செய்ய மேலும் உண்மை தகவலை Google Reverse Image search மூலம் ஆராய்ந்தோம். அப்போது அவரின் பல காணொளியினை பார்க்க நேர்ந்தது. ஆனால் அவர் எங்கேயும் இந்தி மொழியில் பேசவில்லை. பெரும்பாலும் அவர் ஆங்கிலத்தில் தான் பேசியிருக்கிறார்.

தொடர்ந்து, சுந்தர் பிச்சை உரையாற்றிய உண்மையான மூல காணொளியினை தேடினோம். அந்த வீடியோ காட்சியைப் புகைப்படமாக மாற்றி கூகுள் லென்ஸ் தளத்தில் பதிவேற்றித் தேடிய போது, பல செய்தி தொகுப்புகள் கிடைத்தன. அவற்றை ஆய்வு செய்தப்போது அதில் ஒரு பதிவில் ஆங்கிலத்தில் பேசி இருந்தார். அந்த காணொளி 2016ம் ஆண்டு அமெரிக்காவின் சிலிக்கான் வேலியில் நடந்த உலகளாவிய தொழில்முனைவோர் உச்சி மாநாட்டின் (Global Entrepreneurship Summit) போது எடுக்கப்பட்டது என்று தெரிய வந்தது. மேலும் அப்பதிவினி “Global Entrepreneurship Summit 2016 Silicon Valley (GES2016)” என்ற யூடியூப் பக்கத்தில் உள்ளது. அந்த வீடியோவின் 54வது நிமிடத்தில் சுந்தர் பிச்சை மேடைக்கு வந்து பேசத் தொடங்குகிறார். 10 நிமிடங்கள் அவர் உரையாற்றி இருக்கிறார். அக்காணொளியில் ஒரு மணி நேரம் 5வது நிமிடத்தில் அவர் பேசி முடிக்கிறார். அக்காணொளி முழுவதையும் பார்த்தோம். அதில் அவர் ஆங்கிலத்தில் மட்டுமே பேசுகிறார், எங்கேயும் இந்தியில் அவர் பேசவில்லை.

அதன் விவரம் இங்கே காணலாம்

Full View

2016ம் ஆண்டு நடந்த உலகளாவிய தொழில்முனைவோர் உச்சி மாநாட்டில் சுந்தர் பிச்சை பேசியதை, சிலர் இந்தியில் டப்பிங் செய்துள்ளனர் என்பது உறுதியாகிறது. அந்த காணொளியினை எடுத்து, கூகுள் CEO சுந்தர் பிச்சை இந்தியில் பேசினார் என்று தவறாகப் பகிர்ந்திருப்பது, இதன் மூலம் உறுதியாகிறது. நமக்கு கிடைத்த ஆதாரங்கள் சமூக ஊடகங்களில் பரவும் இப்பதிவு தவறானது என்று உறுதி செய்யப்படுகிறது.

மேலும் அவரே ஒரு காணொளியில் தனக்கு இந்தியில் உரையாட தெரியாது என்று கூறும் பதிவின் விவரம்

Full View

முடிவு: கூகுள் தலைமை நிர்வாகி சுந்தர் பிச்சை ஆங்கிலத்தில் பேசிய பதிவினை, தவறாக இந்தியில் டப்பிங் செய்து, மாற்றியமைத்து அவர் இந்தியில்தான் நன்றாக உரையாடுகிறார் என்று தவறாக சமூக ஊடகங்களில் போலித் தகவல் பரப்பியது தெளிவாக தெரிகிறது. அதனால் அரசியல் உள்நோக்கத்துடன் பரப்பப்பட்ட இந்த செய்தியினை யாரும் நம்ப வேண்டாம். உறுதி செய்யாமல் மற்றவர்களுக்குப் பகிர்வதையும் தவிர்க்கவும் என தெலுங்கு போஸ்ட் வலியுறுத்துகிறது.

Claim :  கூகுள் தலைமை நிர்வாகி சுந்தர் பிச்சை இந்தியில் நன்றாக பேசுவார்
Claimed By :  Social Media
Fact Check :  False
Tags:    

Similar News