பாகிஸ்தானில் போலி கால் சென்டரில் நடந்த விசாரனைக்குப் பிறகு உபகரணங்கள் கொள்ளையடிக்கப்பட்டதாகக் கூறும் காட்சிகள், சமூக ஊடகங்களில் தவறான தகவலோடு வைரலாக பரவி வருகிறது.
பாகிஸ்தானிய மக்கள் சீன கால்சென்டரை தாக்கி லேப்டாப்கள், மானிட்டர்கள் இன்னும் பலவற்றை கொள்ளையடித்தனர்.;

பல்வேறு நாடுகளில் மக்களை ஏமாற்றுவதையே ஒரே நோக்கமாகக் கொண்ட போலி கால் சென்டர் நிறுவனங்கள் செயல்பட்டு வருகின்றன. இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில், அமெரிக்க குடிமக்களை குறிவைத்து செயல்பட்ட நூற்றுக்கணக்கான போலி கால் சென்டர்களை அங்குள்ள போலீசார் கண்காணித்து முறியடித்துள்ளனர்.
சமீபத்தில், தெலங்கானா சைபர் பாதுகாப்பு பிரிவு அதிகாரிகள் (TGCSB) ஹைதராபாத் நகரின் ஹைடெக் பகுதியில் செயல்பட்ட ஒரு போலி கால் சென்டரை சுற்றிவளைத்து, 63 பணியாளர்களை கைது செய்துள்ளனர். இந்த நிறுவனம் பே-பல்(PayPal) வாடிக்கையாளர் சேவை மையம் போல உருவாக்கப்பட்டு, அமெரிக்காவில் வசிக்கும் இந்தியர்கள், இந்திய வம்சாவளி வந்தவர்கள் மற்றும் அமெரிக்க குடிமக்களை ஏமாற்றி பணம் பறித்து மோசடியில் ஈடுப்பட்டுள்ளது.
இந்நிலையில், அண்டை நாடான பாகிஸ்தானைச் சேர்ந்த ஒரு காணொளி சமூக ஊடகங்களில் விருவிருப்பாக பரவி வருகிறது. சீன நாட்டினைச் சேர்ந்த தொழிலதிபர் ஒருவர் பாகிஸ்தானில் கால் சென்டர் திறந்ததாகவும், அதை அந்நாட்டு மக்களே கொள்ளையடித்ததாகவும் அக்காணொளியில் கூறப்பட்டுள்ளது.
Claim in Hindi: “चीन ने 🇵🇰पाकिस्तान में कॉल सेंटर खोला। लेकिन जिहादी,आतंकवादी, लुटेरे, चोर भिखारी कहां मानने वाले थे, सब कुछ लूट लिया..”
காணொளி வாயிலாகப் பகிரப்பட்ட தவறான தகவல் (இந்தியில்):
Claim in Hindi: “चीन ने 🇵🇰पाकिस्तान में कॉल सेंटर खोला। लेकिन जिहादी,आतंकवादी, लुटेरे, चोर भिखारी कहां मानने वाले थे, सब कुछ लूट लिया..”
இதன் விளக்கம் தமிழில்,
"சீனா பாகிஸ்தானில் கால் சென்டர் தொடங்கியது. ஆனால், பயங்கரவாதிகள், கொள்ளையர்கள், திருடர்கள், பிச்சைக்காரர்கள் அதை அப்படியே சூறையாடிவிட்டார்கள்!"
சீனா பாகிஸ்தானில் கால் சென்டர் திறந்தது, ஆனால் அங்கு உள்ளவர்கள் அனைத்தையும் கொள்ளையடித்து விட்டனர் என அச்செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அந்த பதிவின் விவரங்கள் உள்ளடங்கிய தரவுப்படம்
உண்மை சரிப்பார்ப்பு:
இந்த காணொளியின் பரவும் தகவலின் உண்மைத்தன்மை மீதான சந்தேகத்தினை ஆராயும் நோக்கில் தெலுங்கு போஸ்ட் உண்மை சரிப்பார்ப்பு குழு ஆய்வு மேற்கொண்டது.
அதில் குறிப்பாக X தளம் (முன்னாள் ட்விட்டர்) போன்ற சமூக ஊடகங்களில் இந்தக் காட்சிப்பதிவு வைரலாக பகிரப்படுகிறது. இதனை தொடர்ந்து இத்தகவல் பற்றி பாகிஸ்தான் மற்றும் இந்திய ஊடகங்கள் என்ன தெரிவிக்கின்றன என்பதனை அறிந்துக்கொள்ள முயன்றோம்.
முதலில் அந்தச் செய்தி தொடர்பான முக்கிய வார்த்தைகளைக் கொண்டு கூகுள் தேடல் மூலம் ஆய்வு மேற்கொண்டோம்.
அப்போது ‘Indian Express’ என்ற செய்தி நிறுவனத்தின் சார்பாக மார்ச் 17, 2025 அன்று வெளியிடப்பட்ட கட்டுரை மூலம், பாகிஸ்தானின் ஃபெடரல் இன்வெஸ்டிகேஷன் ஏஜென்சி (FIA) மார்ச் 15, 2025 அன்று இஸ்லாமாபாத் நகரில், சீனர்களால் இயக்கப்பட்ட போலி கால் சென்டர் மீது நடவடிக்கை எடுக்கும்பொருட்டு திடீர் சோதனையில் ஈடுபட்டனர்.
இந்த F-11 பகுதியிலுள்ள நிறுவனத்தில் பாகிஸ்தானியர்கள் வேலை செய்துவந்துள்ளனர். ஆனால் அதன் மேலாண்மை சீனர்களின் கட்டுப்பாட்டில் இருந்தது. இந்நிலையில் இந்த கால் சென்டர் பல்வேறு நாடுகளின் மக்களை ஏமாற்றி பணம் பறிக்க அமைக்கப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அந்த அதிரடிச் சோதனையில் வெளிநாட்டவர்கள் சிலர் உட்பட 24 பேர் கைது செய்யப்பட்டனர்.
இந்நிலையில், பாகிஸ்தானிய ஊடகமான ‘The Nation’ என்னும் ஊடகம் செய்தி வெளியிட்டது. அந்த செய்தியில், ஃபெடரல் இன்வெஸ்டிகேஷன் ஏஜென்சி (FIA) மற்றும் பாகிஸ்தான் உளவுத்துறை இணைந்து இந்த அதிரடி தாக்குதலை மேற்கொண்டது. ஆனால் அதற்கிடையில் அந்நிறுவனத்தில் பணிப்புரிந்த அதிகாரிகள் மற்றும் உள்ளூர் மக்கள் அங்கு புகுந்து கணினிகள், மின்சாதனங்கள், அலுமனைகள் உள்ளிட்ட பொருட்களை பறித்து சென்றுள்ளார்கள்.
ஆனால் அதனை விசாரனை குழு அதிகாரிகளால் தடுக்க முடியவில்லை. மேலும், இந்த கலவரத்தின்போது சீன மேலாண்மை தரப்பினரின் சில முக்கிய உறுப்பினர்கள் தப்பிச் சென்றதாக தகவல்களும் வெளியாகியுள்ளது.
இச்சம்பவம் குறித்து சமூக ஊடகங்களில் தொடர்ந்து தேடியபோது, Pakistan Voice (@PakVoice_org) என்ற X கணக்கில் ஒரு விளக்கமான பதிவு கிடைத்தது. அப்பதிவில்,
"தாக்குதலுக்குப் பிறகு பதிவான வீடியோக்களில், ஊழியர்களும் உள்ளூர் மக்களும் கணினிகள், மின்னணு சாதனங்கள், அலுமனைகள் ஆகியவற்றை எடுத்துச் செல்லும் காட்சிகள் பதிவாகியுள்ளன. சில ஊடகங்கள் இதை ‘கொள்ளை’ என அடையாளப்படுத்தின. ஆனால் உண்மையில், ஊழியர்கள் தங்கள் நிறுவனமே மோசடி செய்கிறது என்பதை அறிந்தபோது, மேலாண்மையினர் தப்பியதைக் காண, சம்பளத்தைக் கூட பெற முடியாமல் போகுமோ என்ற அச்சத்தில் கம்ப்யூட்டர் உள்ளிட்ட பொருட்களை எடுத்துச் சென்றனர்."
சமூக ஊடகங்களில் பரவியதுப் போல, நியாயமான சீன நிறுவனத்தினை பொதுமக்கள் கொள்ளை அடித்துச் செல்லவில்லை. இது போலி கால் சென்டர் என்பதும், அங்கு வேலை செய்தவர்கள் சம்பளத்தை இழக்கக்கூடும் என்ற பயத்தால் உபகரணங்களை எடுத்துச் சென்றனர் என்பது தான் உண்மைச் செய்தி ஆகும். எனவே, வைரலாக பரவும் இந்தப் பதிவில் ஒரு பகுதி மட்டுமே உண்மை. மற்றவை திரித்துச்சொல்லப்பட்ட தகவலாகும்.
Fact Check: பாகிஸ்தானில் போலி கால் சென்டரில் நடந்த விசாரனைக்குப் பிறகு உபகரணங்கள் கொள்ளையடிக்கப்பட்டதாகக் கூறும் காட்சிகள், சமூக ஊடகங்களில் தவறான தகவலோடு வைரலாக பரவி வருகிறது.
Fact Check : போலி கால் சென்டர் மீது பாகிஸ்தான் FIA ரெய்டு நடத்தியது. பணியாளர்கள் சம்பளம் கிடைக்காது என்பதற்காக உபகரணங்களை எடுத்துச் சென்றனர்.