உண்மை சரிபார்ப்பு : பணத்திற்காக சீட் கவர்களை கிழித்தும் டயர்களை பஞ்சர் செய்யும் நபர் இஸ்லாமியர் அல்ல!
நவீன டிஜிட்டல் யுகத்தில் வெகுவாக பரவும் காணொளிகளும், சமூக ஊடகங்களும் ஒன்றோடொன்று பிரிக்க முடியாதவையாக விளங்குகிறது.
Claim :
பஞ்சர் பார்க்கும் ஒருவர், தன் தொழிலை மேம்படுத்த வாகனங்களின் இருக்கைகளை கிழித்து, டயர்களை பஞ்சர் செய்துள்ளார் என பரவும் குற்றச்சாட்டு.Fact :
வாகனங்களின் சீட் கவர்களை கிழித்தவர் தீரஜ் அகர்வால் எனும் தனிநபர். மேலும் இவர் இந்தச் செயல்களை டேராடூனில் உள்ள ஒரு பார்க்கிங் தகராறு காரணமாக செய்ததாக தெரிய வந்துள்ளது.
நவீன டிஜிட்டல் யுகத்தில் வெகுவாக பரவும் காணொளிகளும், சமூக ஊடகங்களும் ஒன்றோடொன்று பிரிக்க முடியாதவையாக விளங்குகிறது. சமூக ஊடகங்கள் உடனடியான ஒரு செய்தியினை தகவலை கோடிக்கணக்கான பயனர்களிடம் கொண்டுச்சேர்க்கும் வல்லமை பெற்றுள்ளன. ஒரு காணொளி பதிவேற்றம் செய்யப்பட்டதுமே, அதனை சந்தாதாரர்கள் மற்றும் அந்த சமூக ஊடகக் கணக்கினை பின்தொடர்பவர்களால் பார்க்க முடியும். இவ்வாறு பரப்பப்படும் வீடியோக்கள் தினசரி வேகமாக வாட்ஸ்அப் குழுக்களிலும் பரவுகின்றன, அங்கு பயனர்கள் அவற்றை மற்றவர்களுக்கு பகிர்வதற்கு தயங்குவதில்லை. ஆனால், பலர் அவற்றின் உண்மைத்தன்மையை சரிபார்க்காமல் பகிருவதால் தவறான தகவல்கள் வேகமாக பகிரப்படுகிறது. இது சமுதாயத்திற்கு நல்லதன்று.
இவ்வாறான பகிர்வுகள், தப்பான செய்திகளை பரப்புவதுடன் மட்டுமல்லாமல், பயனர்களிடையே குழப்பமும் அவநம்பிக்கையும் ஏற்படச் செய்கிறது. இதற்கு எதிராக, வீடியோக்களின் மூலமாகவும் நம்பகத்தன்மையும் சரிபார்க்கும் விதத்திலும் மக்கள் கவனம் செலுத்த வேண்டும். அதற்கான அவசியம் ஏற்பட்டுள்ளது. மக்களிடையே சமூக ஊடகங்களை பொறுப்புடன் பயன்படுத்துவதை ஊக்குவிப்பதும் மற்றும் தவறான தகவல்களைத் தடுப்பதும் தான் அறிவார்ந்த சமூகத்தை உருவாக்குவதற்கு வழங்கும் பங்களிப்பாகும்.
அதேபோல, ஒரு இளைஞர் இரண்டு அல்லது மூன்று இருசக்கர வாகனங்களின் சீட் கவர்களை சாலையோரத்தில் கிழிப்பது போன்ற ஒரு காணொளி சமூக ஊடகங்களில் வைரலாகியுள்ளது. அதே காணொளியில், அந்த நபர் ஒரு வாகனத்தின் டயர்களையும் பஞ்சர் செய்வதும் பதிவாகியுள்ளது.
இந்த காணொயில், அந்த நபர் ஒரு இஸ்லாமிய பஞ்சர் பழுது வேலைச் செய்யும் ஒருவர் எனவும், வாகனங்களை முறைகேடாக சேதப்படுத்தி தன்னுடைய வருமானத்தை தவறான வழியில் உயர்த்த முயற்சித்ததாகவும் பகிரப்பட்டுள்ளது.
ஒரு பயனர் தனது X கணக்கில் காணொயினை பகிர்ந்தபோது, "முகம்மது ஜுனைத் வாகனங்களின் சீட்டுகளை பிளேடால் கிழிக்கிறார்; ஒருவர் அதனை கேமராவில் பதிவுச் செய்ததும் வெகுவாக பரவியது. இதனால், அந்த நபர் ஜுனைத் பஞ்சர் மற்றும் சீட் கவர் கடை நடத்துவதால், தனது தொழிலை மேம்படுத்த முயன்றதாக தெரிகிறது" எனக் கூறியுள்ளார்.
இந்த வீடியோ 1.9 மில்லியன் பார்வைகள், 9958 பகிர்வுகள் மற்றும் 23.1k விருப்பங்களையும் பெற்றுள்ளது.
देहरादून के नेहरूग्राम की घटना । मोहम्मद जुनेद सड़क के किनारे खड़ी तमाम गाड़ियों के सीट कवर को और सीट को बड़े से ब्लेड से फाड़ता हुआ कमरे में कैद हुआ । कुछ दूर आगे मोहम्मद जुनैद की सीट कवर की दुकान है । तो यह अपनी दुकान की बिक्री बढ़ाने के लिए यह नया तरीका कर रहे थे । सोचिए आप इसे कहां तक निपट पाएंगे ।
இப்பதிவினை ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கும் பொழுது, டேராடூனின் நேருகிராம், சாலைப்புறத்தில் நிறுத்தப்பட்ட வாகனங்களை சேதப்படுத்திய முகம்மது ஜுனைத் வீடியோவில் பிடிபட்டது என்ற அதிர்ச்சியூட்டும் சம்பவம் வெளிச்சத்துக்கு வந்தது. அவர் பெரிய பிளேடின் உதவியால் இந்த வாகனங்களின் சீட் கவர்களை கிழிப்பது தெரிய வந்துள்ளது. ஜுனைதின் சீட் கவர் கடை அருகிலேயே உள்ளதன் காரணமாக, தன்னுடைய கடை விற்பனையை மேம்படுத்தவே அவர் இந்த ஒழுங்குக்கேடான நடைமுறையை செய்ததாக அதில் குறிபிடப்பட்டிருந்தது.
உண்மை சரிபார்ப்பு:
இந்த கூற்று தவறானது. விரைவாக பரவிய வீடியோவில் காணப்படும் நபர் முஸ்லிம் அல்ல. மேலும் அவர் தனது தொழிலை மேம்படுத்துவதற்காக டயர்களை சேதப்படுத்திய பஞ்சர் பழுது வேலைக்காரரும் அல்ல. அந்த நபர் தீரஜ் அகர்வால் என்ற ஆசிரியர், மற்றும் அவர் இந்த நடவடிக்கையை பார்க்கிங் பிரச்சனைகள் காரணமாக செய்துள்ளார்.
இதனை தீர விசாரிக்கும்போது, அக்காணொளியில் இளைஞர் கிழித்துவிடும் ஸ்கூட்டரின் சீட் கவரின் எண் தகடு "UK" என்று தொடங்குவது கவனிக்கப்பட்டது. இதனால், இந்த சம்பவம் உத்தராகண்டில் நடந்திருக்கலாம் என்று நம்பப்படுகிறது.
எண் தகடு பதிவிட்ட படம்
ஒரு உள்ளூர் பத்திரிகையாளரை தொடர்பு கொண்ட போது, இந்த சம்பவம் விரைவாக பரவிய வீடியோவில் குறிப்பிட்ட கூற்றுடன் தொடர்பில்லையென்று அவர் தெரிவித்தார். இந்த சம்பவம் ஆகஸ்ட் 2024-ல் பார்க்கிங் பிரச்சனைகளின் காரணமாக நடந்தது. மற்றும் அவ்வீடியோவில் உள்ள நபர் தீரஜ் அகர்வால் என்ற ஆசிரியர் என்றும் அவர் தெரிவித்தார்.
முக்கிய வார்த்தைகளை தேடும்போது தீரஜ் அகர்வாலின் விவரங்கள் கிடைத்தது மற்றும் அவரை தொடர்புகொள்ளவும் முடிந்தது.
அவரோடு தொலைபேசியில் உரையாடிய போது, அவர் தானே சீட் கவர்களை கிழித்ததாக தெரிவித்தார். அவர் கூறியதாவது, "நான் டேராடூனில் ஒரு ட்யூஷன் சென்டரை நடத்துகிறேன், மற்றும் இந்த சம்பவம் ஆகஸ்ட் 5, 2024 அன்று நிகழ்ந்தது. எனது ட்யூஷன் சென்டருக்கு அருகே ஒரு பொது பார்க்கிங் உள்ளது. மக்கள் காலை நேரத்தில் வாகனங்களை அங்கு நிறுத்திவிட்டு, முழு நாளும் காணாமல் போகின்றனர். அருகிலுள்ள கடை உரிமையாளர்கள் பலமுறை அவர்களை நிறுத்த முயன்றும், அவர்கள் கேட்கவில்லை. அவர்களுக்கு ஒரு பாடம் புகட்டவே, இச்சம்பவம் செய்யப்பட்டது. நான் என் மாணவர்களின் பழைய சீட் கவர்களையும் கிழித்து, புதியவற்றை மாற்றினேன்."
ஆனால், யாரோ இதனை ஒரு வீடியோ எடுத்துவிட்டனர், அதுதான் சமூக ஊடகங்களில் வெகுவாக பரவியது. மேலும் அவர் இந்த விவகாரம் காவல் துறையினரின் கவனத்திற்கும் கொண்டு சேர்க்கப்பட்டுள்ளது என்றும் குறிப்பிட்டார்.
மேலும், அந்த வீடியோ முதலில் ஒரு உள்ளூர் இணைய பக்கத்தில் ஒரு நல்ல செய்தியுடன் பதிவேற்றப்பட்டது என அவர் தெரிவித்தார். அவர் கூறியது, "நான் அவர்களுக்கு நன்றி தெரிவித்தும் ஒரு பதிவேற்றினேன்."
ஆனால், பின்னர் அக்காணொளி தவறான தகவலுடன் வைரலாகியது. அவர் கூறியதாவது, "நான் அந்த பக்கத்திடம் அதை நீக்குமாறு கேட்டுக்கொண்டேன். ஆனால் அதற்குள், அது பரவி, தவறான கதையையும் பரப்பியுள்ளது". இதன் விளைவாக, அவர் டேராடூன் காவல் துறைக்கு மின்னஞ்சல் மூலமாக புகார் செய்தும் உள்ளார்.
மேலும், வீடியோவில் டயரை பஞ்சர் செய்கிற நபர் அதில் குறிப்பிட்டவர் அல்ல என்றும் அவர் தெளிவுபடுத்தினார்.
ஆகையால், அக்கூற்று தவறானது என கண்டறியப்பட்டது. அக்காணொளியில் உள்ள நபர் இஸ்லாமியர் அல்ல. அவர் பஞ்சர் பழுது வேலைக்காரரும் அல்ல. உண்மையில், அந்த நபர் தீரஜ் அகர்வால் என்ற ஆசிரியர் மற்றும் அவர் இந்த நடவடிக்கையை பார்கிங் பிரச்சனைகளை சரிசெய்ய நோக்கில் செய்துள்ளார் என்பதும் உண்மைச் சரிபார்ப்பில் கண்டறியப்பட்டுள்ளது.