கடலில் விநோத உயிரினங்கள் பிடிப்பட்டதாக பரவும் காணொலி!
கடலில் உள்ள பல வித்தியசமான அதிசய உயிரினங்கள் என்று சமூக ஊடகங்களில் காணொலி ஒன்று வெகுவாக பரவுகிறது.

Claim :
ஆழ்கடலில் பிடிக்கப்பட்ட அபூர்வ உயிரினங்கள் என உலாவும் காணொலிFact :
முற்றிலும் தவறான காணொளி. இது AI தொழில்நுட்பத்தால் செயற்கையாக உருவாக்கப்பட்டது.
கடலில் உள்ள பல வித்தியசமான அதிசய உயிரினங்கள் என்று சமூக ஊடகங்களில் காணொலி ஒன்று வெகுவாக பரவுகிறது. தற்போது AI தொழில்நுட்ப உதவியுடன் சிலரால் உண்மைக்கு மாறான, இயற்கைக்கு மாறான மற்றும் உள்நோக்கத்துடன் பல்வேறு புகைப்படங்கள் மற்றும் காணொலிகள் பெரிய அளவில் சமூக வளைதளங்களில் பரப்பப்படுகிறது.
மேலும் இவ்வாறு தொழில்நுட்ப உதவியால் உருவாக்கப்படும் கதை, புகைப்படம் மற்றும் காணொளி மிகவும் தத்துருபமாக உள்ளது. இதனை காணும் போது மக்கள் உண்மை எதுவென்று புரியாமல் குழப்பமான மன நிலைக்கு தள்ளப்படுகிறார்கள். இந்த வகையில் ஆச்சரியமூட்டும் அச்சுறுத்தும் பல கதைகள் AI உதவியுடன் உருவாக்கப்பட்டு பரப்பப்படுகிறது. வேற்று கிரக வாசிகள், விண்களம், இயற்கை சீற்றம் போன்றவை அந்த கதைகளில் அடக்கம்.
கீழே முகநூல் ஒன்றிலிருந்த பதிவின் விவரம் :
இந்த வகையில், “கடலில் உள்ள அற்புத உயிரினங்கள். இதுமாதிரியெல்லாம் உயிரினங்கள் கூட கடலில் இருக்குமா...!! படைப்புகளை பார்த்து வியக்கின்ற நாம், படைத்தவனை நினைத்து பார்க்கின்றோமா? சிந்திப்போம்… இனியாவது......நேசத்துடன்” என்ற தலைப்பு செய்தியோடு சமூக வலைதளங்களில் பல்வேறு காணொளி பரவி வருகிறது. மேலும் அதில், மீனவர்கள் கடலில் பிடித்த உயிரினங்களை, மற்றவர்களுக்கு காட்டுவது போன்ற காட்சிகள் பதிவாகியுள்ளன. இப்பதிவில் வரும் உயிரினங்கள் மிகவும் விநொதமாகவும், பயங்கரமாகவும் இருந்தன. இதனை பார்ப்பவர்கள் மனதில் உலகத்தில் ஏதோ மரபனு மாற்றங்கள் நிகழ்வதாக என்ற அச்சயுணர்வு தூண்டுவதாக உருவாக்கப் பட்டுள்ளது.
ஆனால் இவை உண்மை அல்ல. இத்தகவல் தவறானது. இவ்வாறான காணொலி AI தொழில்நுட்பத்தால் உருவாக்கப்பட்டது என்றும் Telugupost உண்மைச் சரிபார்ப்பில் கண்டறியப் பட்டுள்ளது.
உண்மை சரிபார்ப்பு(fact check): காணொளியை ஆய்வு செய்தபோது, அவை AI தொழில்நுட்பத்தால் உருவாக்கப்பட்டது என்றும், காணொளிகளில் இருக்கக்கூடிய படச்சிதைவுகளும் புளப்பட்டன. அதன்பிறகு இப்பதிவுகளிலுள்ள குறிப்பிட்ட பகுதியை, புகைப்படமாக கூகுள் ரிவர்ஸ் இமேஜ் சர்ச் செய்யப்பட்டது. அப்போது, AI மூலம் உருவாக்கப்பட்ட காணொளிகளை வெளியிடக்கூடிய “mysticworld “ என்ற இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவேற்றப்பட்ட அந்த காணொளியின் ஒரு குறிப்பிட்ட பகுதி மட்டும் வெளியிடப்பட்டிருந்தது. ஆகவே, AI தொழில்நுட்பத்தால் உருவாக்கப்பட்டது என்பது புரிந்துக்கொள்ள முடிகிறது.
தொடர்ந்து தேடுகையில் voidstomper என்ற இன்ஸ்டகிராம் பக்கத்திலும் பதிவேற்றப்பட்டிருந்தது. இதிலிருந்த பதிவினை ஆய்வுச் செய்யும் போது அந்த விநோத பிராணிகள் கடலில் நடப்பது போன்றும், மனிதர்களோடு இயல்பாக இருப்பது போன்று காட்சியாக்கப்பட்டுள்ளது. அதனை அதிலுள்ள மனிதர்கள் மிக இயல்பாக அந்த உயிரினங்களை தொடுவதும் பிடிப்பதும் போன்று காட்டப்பட்டுள்ளது. இவ்வாறு முன்னெச்சரிக்கை நடவடிக்கை இல்லாமல் ஒரு புதிய உயிரினங்கள் அருகில் செல்ல அனுமதிக்கப் படமாட்டார்கள்.
ஆய்வின் முடிவு: அந்த காணொளிகளில் அவை எந்த கடல் பகுதியை சார்ந்தது போன்ற தகவல்கள் எதுவும் குறிப்பிடவில்லை. யார் அதனை முதலில் கண்டறிந்தவர் ஆய்வாளர்கள் , விஞ்ஞானிகள் என ஒருவரின் பெயர் கூட அதில் சொல்லப்பட வில்லை. அந்த பிராணிகளின் எண்ணிக்கை, பன்பு , உணவு என எதைப்பற்றியும் விரிவாக விளக்கவில்லை. எந்த ஒரு அறிவியல் சார்ந்த குறிப்பும் விளக்கமும் அக்காணொளி பதிவுகளில் தரவில்லை.
முழுமையாக AI தொழில்நுட்ப துணையுடன் பார்ப்பவரின் கவனத்தை ஈர்க்கும் வகையில் மட்டுமெ உருவாக்கப் பட்டுள்ளது. இவ்வகையான புகைப்படம் மற்றும் காணொளி அதனை பார்ப்பவர்களை தேவையில்லாமல் பதற்றம் , பயமடையச் செய்கிறது. மக்களின் நேரம் ஆக்கப்பூர்வமாக செலவிடுவதற்கு பதிலாக வீணாகிறது.
இதுபோன்ற விநோதமான, வித்தியசமான பிராணிகளை பார்க்கும் சிலர் , இதனை தீய செயல்பாடுகளின் அறிகுறி என்று எண்ணி மூட நம்பிக்கை செயல்களில் ஈடுபடும் அபாயத்திற்கும் வாய்ப்பு உண்டு. கடல் மற்றும் காடு போன்ற முழுமையாக உணர முடியாத இயற்கை மீதான கட்டுக் கதைகளுக்கும், போலி புரட்டுக்கும் எல்லையே இல்லை. இவ்வாறான அரிய வகை உயிரினம், ஏலியன், வேற்றுக்கிரகம் மற்றும் பரக்கும் தட்டுகள் பற்றிய பதிவுகளை நீங்கள் கடக்க நேரிட்டால் சற்று சந்தித்து அதனை நம்பவும் மற்றவர்களுக்கு பகிரவும்.