உண்மை சரிப்பார்ப்பு:பாஜக பதாகைகளில் எழுத்துப்பிழை என பரவும் போலித் தகவல்
தேசியக் கல்விக் கொள்கை (NEP) தொடர்பான சர்ச்சைக்குப் பிறகு, அதிமுக ஆட்சியிலிருந்தபோது பாஜக அரசு கொண்டு வந்த தொகுதி மறுசீரமைப்பு (delimitation) நடவடிக்கைக்கு எதிராக திமுக கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகிறது.

Claim :
பாஜக தொண்டர்கள் "Cut Out Stalin" என்ற பதாகைகளை ‘Get Out Stalin’ என்ற பதாகைக்கு பதிலாக மாற்றி ஒட்டியதாக தகவல் பதிவுFact :
எதிர்க்கட்சியினர் "Get Out Stalin" என்ற பதாகைகளை ஒட்டியுள்ளனர். ஆனால் வைரலான புகைப்படம் மாற்றியமைக்கப் பட்டதாகும்.
தேசியக் கல்விக் கொள்கை (NEP) தொடர்பான சர்ச்சைக்குப் பிறகு, அதிமுக ஆட்சியிலிருந்தபோது பாஜக அரசு கொண்டு வந்த தொகுதி மறுசீரமைப்பு (delimitation) நடவடிக்கைக்கு எதிராக திமுக கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகிறது. தமிழக முதல்வர் மற்றும் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், குடும்பக் கட்டுபாடு திட்டத்தைக் கடைப்பிடித்ததற்காக தமிழகத்திற்கு பாராளுமன்றத் தொகுதிகள் குறைக்கப்படுவதாக கவலை தெரிவித்தார்.
தற்போது, தமிழ்நாட்டில் 39 லோக்சபா தொகுதிகள் உள்ளன. 2026 ஆம் ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தலுக்கு முன்பு தொகுதி மறுசீரமைப்பு நடைமுறைக்கு வந்தால் தொகுதிகள் குறைக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நடவடிக்கைக்கு தமிழக அரசு கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகிறது
தமிழக முதல்வர் ஸ்டாலின் வெளியிட்ட அறிக்கைக்கு பதிலளித்த மாநில பாஜக துணைத் தலைவர் நாராயண திருபதி, "தொகுதி மறுசீரமைப்பில் மக்கள் தொகை மட்டுமே கணக்கில் எடுக்கப்படும் என்பதை முதல்வர் எவ்வாறு தெரிந்துகொண்டார்?" என்று கேள்வி எழுப்பினார். மேலும், முதல்வர் மக்களை குழப்பும் வகையில் தவறான தகவல் பரப்புவதாக குற்றம் சாட்டினார்.
இந்நிலையில், பாஜக தொண்டர்கள் தமிழில் தவறாக "Cut Out Stalin" என்று எழுதிய பதாகைகளை ஒட்டியதாகவும், ஆனால் ஆங்கிலத்தில் "Get Out Stalin" என எழுதியுள்ளதாகவும் கூறும் ஒரு புகைப்படம் சமூக ஊடகங்களில் பரவி வருகிறது.
“முதல்ல தமிழ் ஒழுங்கா படிங்கடா அப்புறம் இந்திக்கு முட்டு கொடுக்கலாம் 😂”
இந்த புகைப்படத்தை தனது X (முன்பு ட்விட்டர்) கணக்கில் பகிர்ந்த திமுக உறுப்பினர் (@iamyournaveen), "முதல்ல தமிழ் ஒழுங்கா படிங்கடா, அப்புறம் இந்திக்கு முட்டு கொடுக்கலாம் 😂" என்று பதிவு செய்துள்ளார்.
அதன் இணைப்பினை இங்கே காணலாம்
அதன் இணைப்பினை இங்கே காணலாம்
பதிவுப் பற்றிய தரவுப் படம்
பதிவுப் பற்றிய தரவுப் படம்
உண்மை சரிப்பார்ப்பு
தெலுங்குபோஸ்ட் குழுவினர் உண்மை சரிப்பார்ப்பு மேற்கொண்ட ஆய்வில், பாஜக தொண்டர்கள் தவறான எழுத்துப் பிழையுடன் பதாகைகளை ஒட்டியதாக வரும் குறிப்பு தவறானது எனத் தெரியவந்தது.
எனவே நாங்கள் Google Reverse Image Search மூலம் இந்த புகைப்படத்தை ஆய்வு செய்தப்போது, Reddit இல் r/BJPSupremacy என்ற சப்ரெடிட்டில், பாஜக தொண்டர்கள் #GetOutStalin என்ற பதாகைகளை ஒட்டும் ஒரு சிறிய வீடியோ பதிவு கிடைத்தது. இதில், தமிழில் "கெட்" (Get) என எழுதியுள்ளதைத் தெளிவாக காணலாம், ஆனால் "கட்" (cut) என்று இல்லை.
மேலும், 'Polimer News' என்ற யூடியூப் சேனலில் #GetOutStalin என்ற hashtag தொடர்பான செய்தி வெளியிடப்பட்டுள்ளது. அந்த வீடியோவில் 00:32 வினாடியில், தமிழில் எந்த பிழையும் இல்லாத "Get Out Stalin" பதாகை தெளிவாகக் காட்சிப்படுத்தப் பட்டுள்ளது.
இது போதாதென்று தமிழ் வாழ்க, கெட் அவுட் மோடி, கெட் அவுட் ஸ்டாலின் என்ற போஸ்டர்களும் வைரலாகி”
அதேபோல் 'தினமலர்' யூடியூப் சேனலில் வெளியான வீடியோ பதிவில், #GetOutStalin என்ற பதாகைகள் பற்றிய தகவல் கொடுக்கப்பட்டுள்ளது. வீடியோ விவரிப்பில், "தமிழ் வாழ்க, கெட் அவுட் மோடி, கெட் அவுட் ஸ்டாலின்" போன்ற வாசகங்கள் இடம்பெற்றிருப்பதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
“இன்று காலை சரியாக 6 மணிக்கு தனது எக்ஸ் சமூகவலைதளப் பக்கத்தில் கெட் அவுட் ஸ்டாலின் (#GetOutStalin) ஹேஷ்டேக்கை ஆரம்பித்து வைத்தார் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை.”
மேலும் Tamil Wire என்ற இணையதளத்தில், "தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை இன்று காலை 6 மணிக்கு தனது X கணக்கில் #GetOutStalin Hashtag-யை தொடங்கினார்" என குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த தகவல் ஆய்வின் போது, வெகுவாக பரப்பப்பட்ட புகைப்படம் மற்றும் உண்மையான புகைப்படத்தினைப் ஒப்பிட்டு பார்த்ததில், "Cut Out Stalin" என்று தவறாக காட்டப்பட்ட புகைப்படம் மாற்றியமைக்கப்பட்ட ஒன்று, உண்மையான பதாகையில் "Get Out Stalin" என்றே இருந்ததாகவும் உறுதிப்படுத்தப்பட்டது. எனவே, இந்த வெகுவாக பகிரப்பட்டப் புகைப்படம் தவறானது.