உண்மை சரிபார்ப்பு :மக்களை தேடி மருத்துவம் : பயனாளிகளை நேரில் சந்தித்தார் தமிழக முதல்வர்!
சமீபத்தில், தமிழக முதல்வர் எம்.கே. ஸ்டாலின் அவர்களின் தலைமையிலான, தமிழ்நாடு அரசு முன்னணி சுகாதார திட்டமான மக்களைத் தேடி மருத்துவம் எனும் திட்டம் புதிய மைல்கல்லை எட்டியுள்ளது.
Claim :
அரசு மருத்துவமனைகளில் நடத்த வேண்டிய ஆய்வினை தனியார் மண்டப கார் பார்க்கிங்கில் செட் போட்டு நோயாளி போல ஒரு பெண்மணியை நடிக்க வைத்து, முதல்வர் ஸ்டாலின் சூட்டிங் நடத்துவதாக, சமூக வலைத்தளங்களில் பரவும் புகைப்படம்.Fact :
தமிழக முதல்வர் எம்.கே. ஸ்டாலின், மக்களை தேடி மருத்துவ திட்டத்தின் பயனாளிகளை நேரில் சந்தித்து மருத்துவ கிட் வழங்கியுள்ளார். முதல்வரின் செயலை குறைகூறும் தவறான புகைப்படம் போலியானது என கண்டறியப்பட்டுள்ளது.
சமீபத்தில், தமிழக முதல்வர் எம்.கே. ஸ்டாலின் அவர்களின் தலைமையிலான, தமிழ்நாடு அரசு முன்னணி சுகாதார திட்டமான மக்களைத் தேடி மருத்துவம் எனும் திட்டம் புதிய மைல்கல்லை எட்டியுள்ளது. இதுவரை இந்த திட்டத்தின் மூலமாக இரண்டு கோடி மக்கள் பயனடைந்துள்ளனர்.
தமிழக முதல்வர் ஸ்டாலின், ஆகஸ்ட் 5, 2021 அன்று கிருஷ்ணகிரி மாவட்டத்தில் இந்த சுகாதார திட்டத்தை தொடங்கினார். இந்த திட்டத்தின் பயனாளிகள் எண்ணிக்கை இரண்டு கோடி எட்டிய நிலையில், ஸ்டாலின் இரண்டு பெண் பயனாளிகளின் வீடுகளுக்கு சென்று இந்த நலத்திட்டத்தின் மூலமாக அவர்களுக்கு ஏற்பட்ட நன்மைகள் குறித்து கேட்டறிந்தார். மாநில அரசின் இந்த முயற்சி, இந்த வருடம் செப்டம்பர் 25 அன்று நியூயார்க்கில் நடைபெற்ற ஐக்கிய நாடுகள் அமைப்பின் சார்பாக வழங்கும் மாநில உள்ளமைப்புக்கான விருதைப் பெற்றது, இதனால் சர்வதேச அளவில் இத்திட்டத்திற்கு அங்கிக்காரம் கிடைத்தது.
மக்களைத் தேடி மருத்துவம் திட்டம் மாநிலத்தில் இரண்டு கோடி பேரை அடைந்ததை தொடர்ந்து, சில சமூக ஊடகப் பயனர்கள், 71 வயதான ஸ்டாலின் நஞ்சனாபுரம் கிராமத்தில் உள்ள ஒரு பயனாளியின் வீட்டுக்குச் செல்லும் போது, அவரது வருகையினை வெரும் நாடகம் என குறைக் கூறினர். அவர்கள் மாநில அரசின் சுகாதார திட்டத்தை பின்பு விமர்சித்து நகைச்சுவை செய்தனர்.
(கூற்று): ஸ்டாலின் ஆய்வு நடத்தும் சூட்டிங். அடேங்கப்பா ஆட்சி என்பது இதுதான். ‘ஆத்தா எனக்கே முட்டி வலி,போர்ட்டிக்கோவில் உன்னை படுக்க வைத்து ஷூட்டிங் என என்னை கூட்டி வந்துட்டாங்க.’ விரைந்து பரவும் குற்றச்சாட்டின் இணைப்பும் மற்றும் அதன் ஆவணமும்
வைரலாக பரவும் செய்தியின் பதிவுப்படம்
உண்மைச் சரிபார்ப்பு:
இந்த உண்மை கண்டறியும் விசாரனையின் போது, தெலுங்கு போஸ்ட் செய்தி சோதனை அணி இந்த குற்றச்சாட்டை தவறானது என கண்டறிந்துள்ளது.
எங்கள் குழு, சம்பந்தப்பட்ட முக்கிய வார்த்தைகளை தேடியபோது, இந்த விவகாரத்தைப் பற்றிய பல செய்தி அறிக்கைகள் கிடைத்தன. "தி டைம்ஸ் ஆஃப் இந்தியா" செய்திப்படி, தமிழக முதல்வர் எம்.கே. ஸ்டாலின், ஈரோடு மாவட்டம் நஞ்சனாபுரம் கிராமத்தில் உள்ள சுந்தராம்பாலின் வீட்டுக்கு சென்று அவர்களுக்கு மருத்துவ உபகரணங்கள் வழங்கினார், பின்னர் இன்னும் ஒரு பயனாளியான வசந்தாவை சந்தித்தும் அவர்களுக்கும் மருத்துவ உபகரணங்கள் வழங்கி வந்துள்ளார்.
"தி இந்து" செய்திதாள் வெளியிட்ட தகவலின் அடிப்படையில், முதலாவது ஸ்டாலின் இரண்டாவது கோடி பயனாளி சுந்தராம்பாலுக்கு, அவருடைய வீட்டில் நேரடியாக சென்று மருத்துவக் கிட் வழங்கினார். அப்போது அவருடன், குடியிருப்பு மற்றும் நகர வளர்ச்சித் துறை அமைச்சர் எஸ்.முத்துசாமி உடனிருந்தார்.
மேலும் விசாரணையில், முகநூலில் ஒரு காணொளி பரவுகிறது. அதில் முதல்வர் இரண்டு கோடியே ஒன்றாவது பயனாளிகளின் வீடுகளுக்கு சென்றிருக்கும் காணொளி உள்ளது
முதல்வர் தான் பார்வையிட்ட காணொளிகளை X தளத்தில் பகிர்ந்து, மக்களைத் தேடி மருத்துவம் என்ற சுகாதார திட்டத்தை பாராட்டினார். அதில் அவர் 14,000 மருத்துவ பணியாளர்களுக்கு நன்றியும் தெரிவித்துள்ளார்.
தமிழ்நாட்டின் தகவல் மற்றும் பொது தொடர்பு துறை (DIPR) சார்பில் தமிழக முதல்வர் ஈரோடு மாவட்டத்தில் வசிக்கும் இரு பெண் பயனாளிகளுக்கும் மருத்துவக் கிட்களை வழங்கியதாக X தளத்தில் செய்தி வெளியிட்டுள்ளனர்.
இந்த நிலையில், இந்த புகைப்படத்தை வைத்து விளம்பரத்திற்காக சூட்டிங் போல நடத்தப்பட்டது-ன்னு சமூக வலைதளப் பக்கங்களில் செய்தியை தவறாக திரித்து பரப்பப்பட்டு வருவதாக தமிழக அரசின் உண்மை கண்டறியும் குழுவும் இக்கூற்றுக்கு மறுப்பு தெரிவித்து விளக்கம் அளித்திருக்கிறார்கள்.
இவற்றின் அடிப்படையில், முதல்வர் எம்.கே. ஸ்டாலின் அவர்கள் நேரடியால பார்வையிட்ட நிகழ்வினை போலியாக நாடகம் நடத்தியதாக கூறப்படும் குற்றச்சாட்டு முற்றிலும் தவறானது என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதுபோன்ற, விமரர்சனங்களை முன்வைக்கும்போது, அது யாரையும் பாதிக்காத வகையில், மனிதத்தன்மையுடன் உண்மைத் தகவல்களை பகிரவேண்டும் என்ற விழிப்புணர்வு அனைவருக்கும் அவசியமான ஒன்று.