இந்தி எழுத்திற்கு பதிலாக ’தமிழ் எழுத்துக்கள்’ மாற்றி அழிக்கப்பட்டதாக பரவும் வதந்தி!

தமிழகத்தில் மும்மொழி கொள்கை, இந்தி திணிப்பிற்கு எதிர்ப்பு தெரிவித்தும் பல்வேறு ரயில் நிலைய பெயர் பலகையில் இந்தி எழுத்துக்களை அழித்துப் தங்களது எதிர்பை வெளிப்படுத்தியுள்ளனர்.;

Update: 2025-03-07 04:41 GMT
Tiruvarur

Tiruvarur

  • whatsapp icon

தமிழகத்தில் மும்மொழி கொள்கை, இந்தி திணிப்பிற்கு எதிர்ப்பு தெரிவித்தும் பல்வேறு ரயில் நிலைய பெயர் பலகையில் இந்தி எழுத்துக்களை அழித்துப் தங்களது எதிர்பை வெளிப்படுத்தியுள்ளனர்.

இந்நிலையில் திருவாரூர் ரயில் நிலையத்தில் இந்தி எழுத்துக்களுக்கு பதிலாக தவறாக தமிழினை அழித்துவிட்டதாக பதிவுகள் சமூக ஊடகங்களில் பரப்பப்பட்டு வருகிறது.

X தளத்தில் பகிரப்பட்ட இதுகுறித்த செய்தி:

இதுதான் இன்றைய ஸ்டாலின் திமுக…. இவர்களின் தமிழ் பற்று

என்னடா பண்ணி வெச்சிருக்கீங்க மூணாவது மொழிய அழிக்குறோம்னு தமிழ அழிச்சு வெச்சிருக்கீங்க


இந்த பதிவினை கொடுக்கப்பட்டுள்ள இணைப்பில் காணலாம் 

தேசிய கல்விக் கொள்கையையும், அதிலும் மும்மொழிக் கொள்கையையும் ஏற்றுக்கொண்டால்தான் ’சமக்ர சிக்ஷா அபியான்’ திட்டத்தின் கீழ் தமிழ்நாட்டிற்கு வழங்கப்பட வேண்டிய நிதியை விடுவிப்போம் என்ற மத்திய அரசின் நிலைப்பாட்டிற்கு தமிழ்நாட்டில் பல்வேறு அரசியல் கட்சிகள் மற்றும் இயக்கத்தினர் பெரும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இதனை தொடர்ந்து இந்தி எதிர்ப்பு போராட்டம் மீண்டும் தமிழகத்தில் பரவி வருகிறது. ‘இந்தி திணிப்பிற்கு எதிரான’ போராட்டங்களின் ஒரு பகுதியாக தபால் நிலையம், இரயில் நிலையம் போன்ற இடங்களில் ‘இந்தி எழுத்துகள்’ அழிக்கப்பட்டன.

இந்நிலையில், ’இந்தி எழுத்துகள் அழிப்பு’ போராட்டத்தின் போது, திருவாரூர் இரயில் நிலையத்தின் பெயர்ப்பலகையில் உள்ள இந்தி எழுத்துகளை அழிப்பதற்கு பதிலாக ’தமிழ் எழுத்துகளை’ அழித்துவிட்டதாக K.S.ராதாகிருஷ்ணன் என்பவர் ’எக்ஸ்’ தளத்தில் பதிவிட்டுள்ளார்.

உண்மை சரிப்பார்ப்பு :

தெலுங்க்கு போஸ்ட் உண்மை சரிப்பார்ப்பு குழு இந்த தகவலை ஆய்வு செய்தது. கூகுள் தேடலில் முக்கிய வார்த்தைகளை கொண்டு தேடியப் போது இந்த தகவல் குறித்து எந்த செய்தி ஊடகமும் பதிவிட வில்லை என்பதை அறிய முடிந்தது.

இதன் விவரங்கள் அடங்கிய தரவுப்படத்தினை இங்கு காணலாம்


மேலும் அதில் தமிழ் அழிக்கப்பட்டதாக சமூக ஊடகங்களில் பரப்பப்படும் புகைப்படத்தை ’Google Reverse Image Searching’ முறையில் ‘Google lens’ பயன்படுத்தி தேடி பார்த்தப் போது பல்வேறு செய்தித்தளத்தில் வெளியான செய்திகளை காணமுடிந்தது. இந்த செய்திகளில் உள்ள புகைப்படத்தில், ‘திருவாரூர்’ இரயில் நிலையத்தின் பெயர்ப்பலகை இடம்பெற்றிருப்பதைக் பார்க்கலாம். இந்த புகைப்படத்தில் இருக்கும் அந்த பெயர்ப்பலகை பரப்பப்படும் படத்தில் இருக்கும் பெயர்ப்பலகையை ஒத்திருப்பதிருப்பதை காண முடிகிறது. இரு படங்களிலும் பெயர்ப்பலகைக்கு பின்புலத்தில் உள்ள வீடு, மரம் ஆகியவை ஒரே போல் இருப்பதை காண்கிறோம்.


நாங்கள் கூகுள் ரிவர்ஸ் இமேஜ் தேடல் மூலம் ஆய்வு செய்தப்போது , இதுபோன்ற புகைப்படம் indianrailinfo என்ற இணைய தளத்தில் இடம்பெற்றிருந்தது. அதில் திருவாரூர் வழியாக செல்லும் தொடர்வண்டிகளின் விவரங்கள் இருந்ததையும் காண முடிந்தது. இவ்விரண்டு புகைப்படங்களையும் ஒப்பிட்டு பார்க்கும் போது , ஏற்கனவே இருந்த படத்தினை மாற்றம் செய்து தவறான தகவலுடன் பரப்பப்பட்டுள்ளது உறுதியாகிறது.


இதுபற்றிய விவரங்களை ‘நியூஸ்தமிழ்’ செய்தித் தொகுப்பில் வெளியிட்டுள்ளாது. அதன் இணைப்பு இங்கே.

மேலும், தெலுங்கு போஸ்ட் சார்பாக, திருவாரூர் இரயில் நிலையம் அருகில் இருப்பவர்களைத் தொடர்பு கொண்டு இதுப்பற்றி கேட்டறிந்தோம். அந்த இரயில் நிலையத்தில் தமிழ் எழுத்துக்கள் அழிக்கப்படவில்லை என்று அவர்கள் தெரிவித்தனர். நமக்கு கூகுள் தேடலில் கிடைத்த புகைப்படத்தோடு ஒப்பீட்டு பார்த்தால் ரயில் நிலைய பெயர் பலகையில் தமிழ் எழுத்துக்கள் முதலில் எழுதப்பட்டிருப்பதை காண முடிகிறது.

மேலும் வைரலாகப் பரப்பப்படும் புகைப்படத்தில் தமிழ் எழுத்துக்கள் கீழே அழிக்கப்பட்டுள்ளது. இதன்மூலமாக நாம் இந்த புகைப்படம் மாற்றியமைக்கப்பட்ட ஒன்று என உறுதிச் செய்கிறோம். வேண்டுமென்றே இந்தி எதிர்ப்புக்கு ஈடுபடும் போராட்டங்களை கேலி செய்யும் விதத்தில் தமிழக அரசின் மும்மொழி கொள்கைக் குறித்த நிலைப்பாட்டிற்கு எதிராகப் பரப்பப்படும் வதந்தி என அறிய வந்துள்ளது.

தகவலாய்வின் முடிவு: திருவாரூர் இரயில் நிலையத்தின் பெயர்ப்பலகையில் மூன்று மொழிகளில் எழுதப்பட்டிருப்பதை வரிசை மாற்றி அதில் மூன்றாவதாக இருக்கும் தமிழ் எழுத்துக்கள் அழிக்கப்பட்டிருப்பதைப் போல் மாற்றியமைக்கப் பட்டிருக்கிறது. இச்செயல் உள்நோக்கம் கொண்டது. இதுபோன்ற தவறான தகவலை ஆய்வு செய்யாமல் நம்ப வேண்டாம். எனவே தமிழ்நாட்டில் இந்தி திணிப்பு, மும்மொழி கொள்கை எதிர்ப்புப் போராட்டத்தின் போது, திருவாரூர் ரயில் நிலைய பெயர் பலகையில் தமிழ் எழுத்துக்கள் எதுவும் அழிக்கப்படவில்லை. நீக்கப்படவில்லை என்பது உறுதிச் செய்யப்பட்டுள்ளது.

Claim :  திருவாரூர் ரயில் நிலையத்தில் இந்தி எழுத்திற்கு பதிலாக தமிழ் அழிக்கப்பட்டதாக பரவும் புகைப்படம்
Claimed By :  Social Media user
Fact Check :  False
Tags:    

Similar News