புவி வெப்பமடைதலில் தற்போதைய போக்குகள் குறித்த ஆய்வு தவறாக விளக்கப்பட்டுள்ளது. வெப்பநிலை சீராக அதிகரித்துக் கொண்டுதான் இருக்கிறது.
மனிதனின் செயல்களால் CO2 வின் அளவும் அடர்த்தியும் அதிகமாகிறது, அதன் விளைவாக இயற்கையின் வெப்பநிலை 14-16
இயற்கைக்கான ஆய்வு முடிவுகள் 14 அக்டோபர், 2024 அன்று
வெளியிடப்பட்டது. அதன் பிறகு, சமூக வலைத்தள பயனாளர்கள்
சிலர் புவிவெப்பமயமாதல் 1970 களில் இருந்து அதிகரிக்கவில்லை
என்றும், அதற்கு இந்த ஆய்வறிக்கையே சான்று என்றும்
பரப்புகின்றனர்.
உண்மைச் சரிபார்ப்பு: சமூக வலைத்தளத்தில் பதிவிட்டது தவறான
தகவல்
மனிதனின் செயல்களால் CO2 வின் அளவும் அடர்த்தியும் அதிகமாகிறது,
அதன் விளைவாக இயற்கையின் வெப்பநிலை 14-16 மில்லியன்
ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு அதிகமாகியுள்ளது. உலகளவில்
ஆவணப்படுத்தப்பட்ட கல்வி மற்றும் அரசு சார்ந்த ஆறு தரவுகளிலிருந்து
உலக சராசரி வெப்பநிலை சீராக அதிகரித்தித்துள்ளது என்பதனை உறுதிச்
செய்யமுடிகிறது.
CO2 வின் அளவு பூமியின் வரலாற்றில் முன் எப்போதும் இல்லாத
அளவுக்கு வேகமாக அதிகரித்துவருகிறது. இதனால் பசுமைக்குடில்
விளைவு வாயுக்களின் தாக்கமும் அதிகரிக்கிறது என்று
கொலம்பியா பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த பார்பல் ஹோனிச்
குறிப்பிடுகின்றார்.
பருவநிலை மாற்றம் தொடர்பான பன்னாட்டு அரசுகளின் குழு (IPCC)
என்ற ஐ.நா. அமைப்பு , மனிதர்கள் தங்கள் செயல்பாடுகளால்
வளிமண்டலம், கடல் மற்றும் நிலத்தை சந்தேகத்திற்கு இடமின்றி
வெப்பமாகச் செய்துள்ளார்கள். இந்த நூற்றாண்டில் வெப்பமயமாதல்
1.5 டிகிரி செல்சியஸைத் தாண்டும் என்ற கணிப்புகள்
தெரிவிக்கின்றன. இவ்வாறு அக்குழு சார்பாக வெளியிட்டுள்ளார்கள்.
தற்போது நம்மிடையே பருவநிலை மாற்றம் பற்றிய தரவுகள்,
உலகளவில் வெப்பநிலை மற்றும் தீவிர வெப்ப நிகழ்வுகளில்
குறிப்பிடத்தக்க தாக்கங்களை ஏற்படுத்தும் என்று கூறுகின்றன.
காலிஃபோர்னியா யூனிவர்சிட்டியின் சாண்டா கிரூஸ், சமுத்திர
அறிவியல் துறையில் இணை பேராசிரியரான மற்றும் சமீபத்திய
ஆய்வின் முன்னணி ஆசிரியரான கிளாடி பேலியூ, 1970களிலிருந்து
மொத்த மேற்பரப்பு வெப்பநிலைகள் தொடர்ந்து அதிகரித்து
வருவதை ஆய்வு வெளிப்படுத்துவதாக உறுதிப்படுத்தினார்.
பருவநிலை மாற்றத்தை மறுப்பவர்களால் இந்த கண்டுப்பிடிப்புகள்
தவறாகப் பயன்படுத்தப்படும் முறை குறித்து அவர் கவலை
தெரிவித்தார். "நாங்கள் செய்த ஆய்வு, உண்மைக்கு மாறான
கோரிக்கைகளை முன்வைக்க காலநிலை மாற்றம் மறுப்பவர்களால்
பயன்படுத்தப்படுகிறது என்பது மிகவும் வருத்தமளிக்கிறது" என
அவர் ஏஜென்ஸ் பிரான்ஸ்-பிரஸ்(AFP) செய்தி நிறுவனத்திடம்
கூறியுள்ளார்.
இந்த ஆய்வு பூமியின் சராசரி மேற்பரப்பு வெப்பநிலையை
அறிவதில் கவனம் செலுத்துகிறது - அது தான் காலநிலை
மாற்றத்தைக் கண்காணிப்பதற்கான முக்கியமான அளவுகோள்.
கடந்த 50 ஆண்டுகளில் வெப்பநிலை மாற்றம் எப்படி
மாறியிருக்கிறது என்பதை இந்த ஆய்வு முதன்மைப்படுத்துகிறது.
பல்வேறு மாதிரிகளின் மூலம் ஆராய்ச்சியாளர்கள், வெப்பநிலை
அதிகரிப்பு விகிதத்தில் வேகமடைதல் அல்லது சலனம் ஏற்பட்டதா
என்பதை ஆராய்ச்சியாளர்கள் பரிசோதித்தனர். 1970களுக்குப் பின்னர்
வெப்பநிலை அதிகரிப்பு விகிதங்களில் ஏற்பட்ட மாற்றங்கள்
புள்ளிவிவர தரவுகளின் அடிப்படையில் முக்கியத்துவம் வாய்ந்தவை
அல்ல என்று அவர்கள் கண்டறிந்தனர்.
மேலும், கிளெம்சன் பல்கலைக்கழகத்தின் இணைப் பேராசிரியரான
கோலின் கல்லாகர் குறிப்பிடுக்கையில் எங்கள் கண்டுபிடிப்புகள்
மூலம் புவியின் வெப்பம் சீராக அதிகரித்து வருவதை சுட்டிகாட்டிக்
கொண்டே இருக்கிறோம் ."புவிவெப்பமாதல் குறைந்து வருகிறது
என்று சொல்ல எந்த புள்ளிவிவரமும் எங்களிடம் இல்லை, மாறாக
அது 1970 ல் இருந்து அதிகரித்து வருவதையே புள்ளி விவரங்கள்
உறுதிப்படுத்துகிறது" என்பதையும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
முடிவுரை: புவி வெப்பமடைதல் நின்றுவிட்டது அல்லது
குறைந்துவிட்டது என்றோ ஆய்வு கூறவில்லை; மாறாக, இது சில
தசாப்தங்களில் புவிவெப்பம் சீரான அதிகரித்து வருகிறது
என்பதையே உணர்த்துகிறது.
Claim : இயற்கை தொடர்பான ஆய்வு ஒன்றில் புவி வெப்பமடைதல் அதிகரிக்கவில்லை என்று உணர்த்துவதாகவும், பருவநிலை மாற்றம் தொடர்பான கூற்றுகள் மிகைப்படுத்திக் காட்டுவதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
Claimed By : X Users
Fact Check : Misleading