உண்மைச் சரிபார்ப்பு: இந்தக் காணொளி சமீபத்தியதுமில்லை, தமிழ்நாடு / இந்தியா-க்கு தொடர்புடையது அல்ல
ஃபெங்கல் புயல் நவம்பர் 31 ஆம் தேதி இரவு புதுச்சேரி அருகே கரையைக் கடந்த நிலையில், வட தமிழகத்தில் பலத்த காற்றும் அதிகனமழை இடைவிடாது பெய்ந்தது.
‘பிசினஸ் டுடே’ பத்திரிக்கையில் வெளிவந்த ஒரு கட்டுரையில், சென்னையில் மழை பாதிப்பால் மூன்று பேர் இறந்துள்ளனர் என்று மேற்கொள் காட்டப்பட்டுள்ளது . இந்த வடகிழக்கு பருவமழை காலத்தில் வங்கக் கடலில் உருவான இரண்டாவது புயல் இது என்பது குறிப்பிடத்தக்கது. ஃபெங்கல் புயல் கரையைக் கடக்கும் போது மணிக்கு சுமார் 90 கி.மீ வேகத்தில் காற்று வீசியது. ஞாயிற்றுக்கிழமை வரை மழை தொடரும் என்றும், மேக குவியலை பொறுத்து கனமழை இருக்கலாம் என்று சென்னை மண்டல வானிலை ஆய்வு மையம் எச்சரித்து இருந்தது.
குலசை பெயர் பதிவுடன் இணையத்தில் 12 நொடி காணொளி ஒன்று பரவிவருகிறது. அதில் தமிழ்நாட்டின் குலசை கடற்கரையில் புயல் வீசும் காட்சிகள் என்று அந்த காணொளி கூறப்பட்டுள்ளது.
அக்காணொளி மற்றும் அதன் பதிவின் இணைப்பு இங்கு கொடுக்கப்பட்டுள்ளது.
உண்மைச் சரிபார்ப்பு:
காணொளியில் உள்ள செய்தி பொய்யானது. இந்தக் காணொளி சமீபத்தியதுமில்லை, தமிழ்நாடு / இந்தியா-க்கு தொடர்புடையது அல்ல. இந்த காட்சி உண்மையில் சைப்ரஸில் உள்ள அயியா நாபா கடற்கரையில் எடுக்கப்பட்டது.
இந்த காணொளியில் மூலத்தை தேடும் பொழுது இந்த காணொளி imago-images.com என்ற தளத்தில் பதிவேற்றப்பட்டிருந்தது. அயியா நாபா கடற்கரையில் நீர் உறிஞ்சும் காற்றுச்சுழலை கடலின் மேல் கீழிருந்து மேலாக சுழல்வதாய் படம் பிடித்துள்ளனர்.
அக்டோபர் 17, 2024 திங்கட்கிழமை தெற்கு சைப்ரஸில் உள்ள சுற்றுலாத் தலமான அயியா நாபாவில் உள்ள கடற்கரையில் நீர் உறிஞ்சும் காற்றுச்சுழல் கடலின் மேல் கீழிருந்து மேலாக சுழன்று கரைக்கு அருகில் வந்தது.
வார்த்தைகளை கொண்டு தேடும் போது, அதே காணொளி Weather.com இல் "நீரோடு சுழலும் காற்று சுழல் சைப்ரஸ் கடற்கறையை நோக்கி வருகிறது" என்ற தலைப்புடன் பதிவேற்றப்பட்டிருந்தது.
அக்டோபர் 18, 2022 அன்று Fox செய்தியும் அதே வீடியோவை யூடியூப் சேனலில் பதிவேற்றியது.
21 அக்டோபர் 2022 அன்று, USA today ஊடகம் வெளியிட்டிருந்த செய்தியில் இன்று சைப்ரஸ் கடற்கரையை நோக்கிச் வந்த நீ்ருடன் கூடிய காற்று சுழலின் பிரமிப்பான காட்சி என்ற தலைப்பில் ஒரு கட்டுரையை வெளியிட்டுள்ளது.
மேலும் USA today ஊடகம் வெளியிட்டிருந்த செய்தியில், அந்த சூழல் நிலத்தை நோக்கி வேகமாக வந்தது, அது உயரமாக இருந்தது - எனினும் அதனால் யாருக்கும் காயம் ஏற்படவில்லை, கடற்கரையில் உள்ள சில இருக்கைகள் மட்டும் சேதம் அடைந்தது.
எனவே, அந்த காணொளியில் பதிவிட்டிருந்த செய்தி தவறானது. இந்த காணொளி தமிழ்நாட்டுடன் தொடர்புடையது அல்ல. எங்கள் உண்மை கண்டறிதலில் ஒரு பகுதியாக, இந்த காணொளி உண்மையில் சைப்ரஸில் உள்ள அயியா நாபா கடற்கரையில் எடுக்கப்பட்டது என்பதைக் கண்டறிந்துள்ளோம்.