உண்மைச் சரிபார்ப்பு: நீர் வழி பாலம் தமிழ்நாட்டில் கட்டப்பட்டதாக பரவும் தவறான செய்தி. உண்மையில் அந்த கட்டுமானம் தென்னாப்பிரிக்காவில் உள்ள ஒன்று.

தமிழ்நாடு அரசின் 'உங்கள் தொகுதியில் முதல்வர்' என்ற திட்டத்தின் கீழ் குறிப்பிட்ட மாவட்டங்களில் 34 பாலங்களை மேம்படுத்த மாநில அரசு ரூ.

Update: 2024-12-20 14:40 GMT


தமிழ்நாடு அரசின் 'உங்கள் தொகுதியில் முதல்வர்' என்ற திட்டத்தின் கீழ் குறிப்பிட்ட மாவட்டங்களில் 34 பாலங்களை மேம்படுத்த மாநில அரசு ரூ.177 கோடி ஒதுக்கீடு செய்துள்ளது. இந்த திட்டம் வெள்ளத்தால் சேதமடைந்த சாலைகள், பாலங்கள், பொது கட்டுமானங்கள் சீரமைத்தல் மற்றும் மேம்படுத்துதல் திட்டத்தில் கீழ் செயல்படுத்தப்படுகிறது. NABARD-RIDF நிதியுடன் 84 பாலங்கள் சீரமைக்க முன்பு திட்டமிடப்பட்டது , ஆனால் அவசரகால வேலைத்திட்டமாக 34 பாலங்களுக்கு முன்னுரிமை அளிக்கப்பட்டு தமிழ்நாடு அரசின் மாநில நிதியைப் பயன்படுத்தி கட்டுமானங்கள் செய்ய முடிவெடுத்துள்ளது.


'உங்கள் தொகுதியில் முதலமைச்சர்' திட்டத்தின் மூலம் பெறப்பட்ட பொதுமக்களின் மனுக்களின் அடிப்படையில் 24 பாலங்கள் கட்டுவதற்கு நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. இதை தவிர, வெள்ளத்தின் போது கடுமையாக சேதமடைந்த ஐந்து பாலங்கள், இடையூறு இல்லாத மக்கள் போக்குவரத்து தேவையை பூர்த்தி செய்யவும் , மேலும் ஐந்து பாலங்கள் இத்திட்டத்தின் கீழ் செயல்படுத்தவிருக்கிறது. இத்திட்டங்கள் மக்களின் தேவைகளையும், நாட்டின் உட்கட்டமைப்பு தேவைகளையும் தமிழ்நாடு அரசு சீர்த்தூக்கி பார்த்து அணுகுகிறது. - என்று Times of India செய்தி வெளியிடப்பட்டுள்ளது



சமூக வலைத்தளத்தில் ஒரு புகைப்படம் வேகமாக பரப்பப்பட்டு வருகிறது, அந்த படத்தில் புதிதாக கட்டப்பட்ட ஒரு பாலத்தை குறிக்கிறது. அந்த பாலம் தமிழ்நாட்டில் கட்டப்படும் பாலத்தில் ஒன்று என்றும், அதற்க்கு நீர் வரத்து மற்றும் வெளியேறும் கால்வாய் இல்லை என்று பொருள் படுவது போலும் - அதற்க்கான ஒருதுக்கப்பட்ட நிதியை தவறாக பயன்படுத்திவிட்டதுபோல் பதிவிட்டிருந்தார் ஒரு சமூகத்தின் மேல் அன்புள்ள சமூக ஊடக பயனாளர்கள்.


சமூக ஊடக பயனாளர்கள் பாலத்தின் படத்தை கீழ்கண்ட தலைப்புடன் பதிவிட்டிருந்தனர்.

‘பாலம் கட்டிட்ட,

வாய்க்கால் எங்கயா ? கமிசன் போக,

கொடுத்த காசுல, பாலம் மட்டும் தான் கட்ட முடிஞ்சுது.’





இந்த புகைப்படத்தின் மூலத்தை தேடும் பொழுது இந்த புகைப்படம் டிசம்பர் 7 ஆம் தேதி Greater Giyani Municipality என்ற முகநூல் பக்கத்தில் 'பிரிவு F தெருக்கள் மறுசீரமைப்புத் திட்டம்' என்ற தலைப்பில் பதியப்பட்டுள்ளது.


Viral படத்துடன், Greater Giyani Municipality படத்தை ஒப்பிட்டுப் பார்த்தபோது, இரண்டும் ஒன்றே என்பது உறுதியானது



Greater Giyani Municipality பக்க சுயவிவரத்தில் குறிப்பிட்டுள்ளபடி, அது ஒரு அரசு நிறுவனமாகும். மேலும் ஆராயும்போது Greater Giyani Municipality என்பது தென்னாப்பிரிக்காவின் Mopani மாவட்டத்தின் நகராட்சி அமைப்பு என்பதை தேடுதலில் புரிந்துகொள்ள முடிகிறது.


கூடுதலாக, கிரேட்டர் கியானி நகராட்சி அமைப்பை மின்னஞ்சல் மூலம் தொடர்பு கொண்டுள்ளோம். மேலும் பதில் ஏதேனும் கிடைத்தால் நாங்கள் இங்கே ஒரு புதுப்பிப்பை வழங்குவோம்.

 தென்னாப்பிரிக்காவில் கட்டப்பட்ட “பாலம்”; தமிழ்நாடு என்று பரவும் வதந்தி!

தமிழ்நாடு அரசின் உண்மைச் சரிபார்ப்புப் பிரிவின் அதிகாரப்பூர்வ கணக்கான TN Fact Check க்கும் இந்த செய்தியை வதந்தி என்று பரவிவருகிறது என்று அதே படத்தை தலைப்புடன் வெளியிட்டார்.


தென்னாப்பிரிக்காவில் கட்டப்பட்ட “பாலம்”; தமிழ்நாடு என்று பரவும் வதந்தி!



எனவே, அந்த செய்தி தவறானது என்பதை நாங்கள் கண்டறிந்தோம். இந்த வைரலான படம் உண்மையில் தென்னாப்பிரிக்காவில் உள்ள கியானி நகராட்சி (Greater Giyani Municipality) கீழ் உள்ள பிரிவு F மறுசீரமைப்பு திட்டத்தின் கீழ் கட்டப்பட்ட பாலம் என்பதும், தமிழ்நாட்டிற்கும் அந்த பாலத்திற்கும் எந்த தொடர்பும் இல்லை.


ఇప్పుడు Desh Telugu Keyboard యాప్ సహాయంతో మీ ప్రియమైన వారికి తెలుగులో సులభంగా మెసేజ్ చెయ్యండి. Desh Telugu Keyboard and Download The App Now



Tags:    

Similar News