உண்மைச் சரிபார்ப்பு: ஐந்து ரூபாய் நாணயம் செல்லாது என்று ரிசர்வ் வங்கி அறிவித்ததா? உண்மை என்ன?
சமூக ஊடகங்களில் பரவலாக பகிரப்பட்ட ஒரு தகவலில், இந்திய ரிசர்வ் வங்கி ஐந்து ரூபாய் நாணயத்தை நிறுத்தியுள்ளதாக கூறப்பட்டுள்ளது. ஆனால் இதற்கு இந்திய ரிசர்வ் வங்கியின் தரப்பில் எந்தத் தகவலும் வெளியிடவில்லை.;
சமீபத்தில்,கிரிக்கெட் வீரர் மகேந்திர சிங் தோனி அவர்களின் பெயரில் ரூ.7 நாணயம் வெளியிடப்படுவதாக ஒரு போலித் தகவலும் சமூக ஊடகங்களில் பரவியது. அது மகேந்திர சிங் தோனியின் ஜெர்சி எண் 7-க்கு அர்ப்பணிக்கப்பட்டதாக கூறப்பட்டது. பின்னர் பி.ஐ.பி (PIB) இந்தக் கூற்றை தவறானது என்று மறுத்து செய்தி வெளியிட்டது.
உண்மை சரிபார்ப்பு:
மேலும் பரவிவரும் இத்தகவலின் உண்மைத்தண்மை குறித்து தெலுங்கு போஸ்ட் செய்தி பரிசோதனை குழு மேற்கொண்ட விசாரணையில், இந்த செய்தி தவறானது என்று தெரியவந்தது.
கூகுள் ரிவர்ஸ் இமேஜ் தேடலின் மூலம், Securities and Exchange Board of India (SEBI) பதிவு செய்யப்பட்ட நிபுணரின் கடந்த மாத ட்வீட்டின் வழியாக, பழைய ஐந்து ரூபாய் நாணயத்தை உலோக மதிப்பு அதிகமாக இருப்பதால் இடைநிறுத்தியதாகவும், புதிய மெல்லிய நாணயங்களை கொண்டு வந்ததாகவும் தகவல் கிடைத்தது.
தொடர்ந்து, “ஐந்து ரூபாய் நாணயம்” என கூகுளில் தேடலின்போது, சமீபத்திய செய்தி கட்டுரைகளை கண்டுபிடித்தோம். அவற்றில், பழைய ஐந்து ரூபாய் நாணயங்கள் உலோக மதிப்பு அதிகமாக இருப்பதால் இடைநிறுத்தப்பட்டதாக குறிப்பிடப்பட்டிருந்தது.
இந்தியாவில் இரண்டு வகையான ஐந்து ரூபாய் நாணயங்கள் உள்ளன: செம்பு மற்றும் தடிமனான உலோகத்தால் செய்யப்பட்டவை. தடிமனான நாணயங்களை வங்கிகள் தயாரிக்க நிறுத்தியதால், தற்போது மெல்லிய செம்பு நாணயங்கள் மட்டுமே சந்தையில் காணப்படுகின்றன.
வங்காளதேசம் போன்ற இடங்களில், பழைய தடிமனான ஐந்து ரூபாய் நாணயங்கள் உருக வைத்து ரேசர் பிளேட்களாக தயாரிக்கப்படுவதாகவும் தகவல்கள் வெளியாகியது குறிப்பிடப்பட்டுள்ளது. ஆனால், இந்திய ரிசர்வ் வங்கி இதுகுறித்து அதிகாரப்பூர்வமாக எந்த தகவலையும் வெளியிடவில்லை. எனவே, ரிசர்வ் வங்கி ஐந்து ரூபாய் நாணயத்தை தடைசெய்ததாகக் கூறும் தகவல் தவறானது.
Times Now டைம்ஸ் நௌவ் தமிழ் தெரிவிக்கையில், தடிமனான ஐந்து ரூபாய் நாணயங்கள் வங்காளதேசம் போன்ற அண்டை நாடுகளுக்கு கடத்தப்பட்டு, அவற்றை உருக வைத்து ஐந்து ரேசர் பிளேட்கள் தயாரிக்கப்படுகிறது. இதனால், அந்த நாணயங்களின் உலோக மதிப்பு முகமதிப்பை விட அதிகமாக இருந்ததால், இந்திய ரிசர்வ் வங்கி இவ்வகை தடிமனான ஐந்து ரூபாய் நாணயங்களின் தயாரிப்பை நிறுத்தியுள்ளது. இதன் மாற்றாக, மெல்லிய செம்பு உலோகத்தால் செய்யப்பட்ட ஐந்து ரூபாய் நாணயங்கள் தற்போது மக்கள் புழக்கத்தில் உள்ளன.
குறிப்பாக, அதிக உலோக மதிப்புடைய ஐந்து ரூபாய் நாணயங்கள் சந்தையில் இருக்காது என்பது குறிப்பிடத்தக்கது. எனினும், இந்திய ரிசர்வ் வங்கி இதுகுறித்து எந்த அதிகாரப்பூர்வ தகவலையும் இதுவரையில் வெளியிடவில்லை. மேலும், வங்கியின் அதிகாரிகளுடன் தொடர்பு கொள்ள முடியாத காரணத்தினால், இதுபற்றி உறுதியான தகவல் இல்லை. ரிசர்வ் வங்கியின் இணையதளத்திலும் இதுகுறித்து எந்த தகவலையும் காண முடியவில்லை.
அதனால், “இந்திய ரிசர்வ் வங்கி தடிமனான ஐந்து ரூபாய் நாணயங்களை தயாரிப்பினை நிறுத்தியுள்ளது அல்லது தடைசெய்துள்ளது” என கூறப்படும் தகவல் தவறானது என்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.