உண்மைச் சரிபார்ப்பு: “தான் அனைத்து மதங்களையும் மதிப்பவன், பொதுவானவன், சாமனியர்களில் ஒருவன்!” – துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின்
எனவே, அந்த செய்தி பொய்யானது. உண்மையான - வெட்டப்படாத முழுமையான காணொளியில், உதயநிதி ஸ்டாலின் அனைத்து மதங்களுக்கும் மரியாதை செலுத்துவதையும், எந்தவொரு குறிப்பிட்ட நம்பிக்கையுடன் இணைவதை விட, தன்னை அனைவருக்குமான ஒருவர் என்று அடையாளப்படுத்துவதை காணலாம்.;
தமிழ்நாடு துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின், கோவையில் நடைபெற்ற கிறிஸ்துமஸ் விழா ஒன்றில் மத நல்லிணக்கம் தொடர்பாகவும், அனைத்து மத நம்பிக்கைகளும் ஒன்று தான் என்பதை வலியுறுத்தி பேசினார். அனைத்து மதத்தினரும் சமமாக கருதுவதின் முக்கியத்துவத்தை பற்றி எடுத்துரைத்தார். மதத்தை அரசியல் நோக்கங்களுக்காகவும், பிரிவினைக்காகவும் பயன்படுத்துபவர்களுக்கு தனது எதிர்ப்பை வெளிப்படுத்தினார், மனிதன் ஒருவர் மீது ஒருவர் வெறுப்பும் முரண்பாடுகளும் கொள்ள மதத்தை ஒரு கருவியாக பயன்படுத்துபவர்களை கடுமையாக கண்டித்தார் .
கடந்த ஆண்டு ஒரு கிறிஸ்மஸ் கொண்டாட்டத்தில் கலந்துகொண்ட பொது நான் ஒரு கிருத்துவர் என்று சொல்லிக்கொள்வது பெருமையாக இருக்கிறது என்று பேசியதை ஒரு சில மதவாதிகள் உதயநிதி, தன்னை ஒரு பெருமைமிக்க கிறிஸ்தவர் என்று அடையாளப்படுத்தி கொள்கிறார் - இந்துகளே புரிந்து கொள்ளுங்கள் என்ற பொருள் படும் வகையில் செய்திகளை பதிவிட்டுவந்தனர். எல்லா மதத்தினரும் ஒற்றுமையாகவும் நல்லிணக்கத்துடனும் வாழ வேண்டும் என்று கூறி நான் ஒரு கிருத்துவன், நான் ஒரு இசுலாமியன் நான் அனைத்து மதத்தினருக்கும் சொந்தக்காரன் என்று இவ்வாண்டும் தனது உணர்வை மீண்டும் வெளிப்படுத்தினார்.
உதயநிதி ஸ்டாலின் அவர்க்ள் "நான் ஒரு பெருமைமிக்க கிறிஸ்தவன்" என்ற சர்ச்சைக்குறிய 1 நிமிட 29 வினாடிகள் கொண்ட காணொளி சமீபத்தில் சமூக வலைதளங்களில் வேகமாக பரவிவருகிறது. அந்த காணொளியை சமூக ஊடக பயணாளர்கள் தாங்கள் பக்கத்தில் பகிர்ந்துள்ளனர், அதில் அவர் மேலும் "நான் கடந்த வருடம் சொன்னதில் எந்த மாற்றமும் இல்லை, நான் ஒரு பெருமைமிக்க கிறிஸ்தவன் என்று மீண்டும் சொல்கிறேன்" என்றார் உதயநிதி ஸ்டாலின்.
அந்த காணொளியை பகிர்ந்து சமூகஊடக பயனாளர் ஒருவர் - உங்கள் மதத்தைப் பற்றி பெருமிதம் கொள்வதில் தவறில்லை, ஆனால் கேள்வி என்னவென்றால் - இந்து மதத்தை தவறாக பயன்படுத்த உங்களுக்கு என்ன உரிமை உள்ளது ? இந்துக்கள் தங்களை பெருமைமிக்க இந்துக்களாக அடையாளப்படுத்திக் கொள்வதில் உங்களுக்கு என்ன பிரச்சினை? என்ற கேள்வியை கேட்டுள்ளார்.
உரிமைகோரல் பதிவின் புகைப்படம் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.
உண்மைச் சரிபார்ப்பு:
கூற்று தவறானது. வேகமாக பரப்பப்பட்ட காணொளி முழுமையானதல்ல. தேவைக்கேற்ப வெட்டப்பட்டு வெளியிடப்பட்டுள்ளது. உண்மையில் அந்த காணொளியில் , உதயநிதி ஸ்டாலின், அனைத்து மதங்களையும் மதிக்கும் ஒருவராகத் தான் தன்னை வெளிப்படுத்திக்கொண்டார், எந்த ஒரு குறிப்பிட்ட மதத்தையும் சாடியோ, கோரவோ இல்லை. தன்னை அனைத்து மதத்தினருக்குமானவர் என்ற ஒரு சராசரி மனநிலையையே அவர் வெளிப்படுத்திருக்கிறார்.
இந்த காணொளி தொடர்பாக செய்தி சேகரிக்கும் போது, டிசம்பர் 18, 2024 ஆம் தேதி , சன் நியூஸ் செய்தி தொலைக்காட்சியின் யூடியூப் சேனல் பக்கத்தில் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலினின் சமீபத்திய பேச்சு என்ற இந்த காணொளியை வெளியிட்டுயிருந்தது.
இப்பொது பரப்பப்படும் காணொளி வெட்டப்பட்டு பகிரப்படுவதாக தெரிகிறது. உண்மையில் அந்த காணொளியில் உதயநிதி ஸ்டாலின், "நீங்கள் என்னை கிறிஸ்தவன் என்று நினைத்தால் நான் கிறிஸ்தவன்,நீங்கள் என்னை முஸ்லீம் என்று நினைத்தால் நான் முஸ்லீம்,நீங்கள் என்னை இந்து என்று நினைத்தால் நான் இந்து. நான் அனைவருக்கும் பொதுவானவன்" என்றே கூறுகிறார்.
தமிழ்நாடு உண்மைச் சரிப்பார்க்கும் குழுவின் இயக்குநர் திரு.ஐயன் கார்த்திகேயன் அவர்களின் X தள பதிவினை பார்த்தோம். அதில் அவர் உதயநிதி அவர்களின் முழுமையான காணொளியை இந்த தலைப்புடன் வெளியிட்டிருந்தார், 'வெட்டப்படாத மற்ற பகுதி இதோ! நீங்கள் வெளியிட தவறியவை'. அதில் "நீங்கள் என்னை கிறிஸ்தவன் என்று நினைத்தால் நான் கிறிஸ்தவன்,நீங்கள் என்னை முஸ்லீம் என்று நினைத்தால் நான் முஸ்லீம், நீங்கள் என்னை இந்து என்று நினைத்தால் நான் இந்து" என்று கூறிய முழு காணொளியம் இடம்பெற்றிந்தது.
வார்த்தைகளை கொண்டு தேடும் பொழுது 19 டிசம்பர் 2024 அன்று இந்தியா டுடே 'நான் ஒரு பெருமைமிக்க கிறிஸ்தவன்' என்ற தலைப்புடன் விரிவான செய்தியொன்றை வெளியிட்டுருந்தது. அதில் மேலும் உதயநிதி ஸ்டாலின் தன்னை 'பெருமைமிக்க கிறிஸ்தவர்' என்று அழைக்கிறார், அவர் அனைத்து மதங்களையும் பிரதிநிதித்துவப்படுத்துகிறார்.
இந்தியா டுடே குறிப்பிட்டுள்ள கட்டுரையில், கடந்த ஆண்டு, கிறிஸ்துமஸ் நிகழ்வில் பங்கேற்ற போது, நான் ஒரு கிறிஸ்தவன் என்று பெருமையுடன் கூறியது, பல சங்கிகளை உடனடியாக எரிச்சலடையச் செய்தது. ஆதானால் இன்று நான் அதை மீண்டும் சொல்கிறேன்: நான் ஒரு பெருமைமிக்க கிறிஸ்தவன்,” என்று உதயநிதி கூறினார்.
“நான் ஒரு கிறிஸ்தவன் என்று நீங்கள் நினைத்தால், நான் ஒரு கிறிஸ்தவன். நான் ஒரு முஸ்லிம் என்று நீங்கள் நினைத்தால், நான் ஒரு முஸ்லிம். நான் இந்து என்று நீங்கள் நினைத்தால், நான் ஒரு இந்து. நான் எல்லோருக்கும் பொதுவானவன். எல்லா மதங்களும் நமக்கு அன்பு செய்ய மட்டுமே சொல்லிக்கொடுக்கின்றன.”என்று அவர் மேலும் கூறினார், ஒற்றுமையும் சகோதரத்துவமும் நம்மிடம் மேலோங்க வேண்டும் என்றும் அவர் கூறினார்.
எனவே, அந்த செய்தி பொய்யானது. உண்மையான - வெட்டப்படாத முழுமையான காணொளியில், உதயநிதி ஸ்டாலின் அனைத்து மதங்களுக்கும் மரியாதை செலுத்துவதையும், எந்தவொரு குறிப்பிட்ட நம்பிக்கையுடன் இணைவதை விட, தன்னை அனைவருக்குமான ஒருவர் என்று அடையாளப்படுத்துவதை காணலாம்.