உண்மை சரிபார்ப்பு: பகல்பூரில் தரையிரங்கும் நேரத்தில் இரு விமானங்கள் போட்டியா? நடந்தது என்ன !
பகல்பூரில் தரையிரங்கும் நேரத்தில் இரு விமானங்கள் போட்டியா? நடந்தது என்ன !;

பகல்பூரில் தரையிரங்கும் நேரத்தில் இரு விமானங்கள் போட்டியா? நடந்தது என்ன !
சில வாரங்களுக்கு முன்பு, சிகாகோவிலிருந்து டெல்லிக்குப் புறப்பட்ட ஏர் இந்தியா விமானம்-126, பல கழிப்பறைகள் பிளாஸ்டிக் பைகள் மற்றும் துணிகளால் அடைக்கப்பட்டிருந்தது. அதனால் அந்த விமானம் திரும்பிச் செல்லுமாறு வலியுறுத்தப்பட்டது. இந்த குழாய் பிரச்சனைக் காரணமாக, வணிக மற்றும் பொருளாதார வகுப்பில் உள்ள 12 கழிப்பறைகளில் வெறும் எட்டு பயன்படுத்த முடியாதவையாக மாறின.
அதனைத் தொடர்ந்து, கிரீன்லாந்து அருகே அட்லாண்டிக் பெருங்கடல் மேல் கிட்டத்தட்ட 10 மணி நேரம் பறந்த பிறகு, பயணிகள் பெருமளவில் அசௌகரியத்தையும், பாதுகாப்பு குறைப்பாடு காரணமாக அச்சத்தையும் உணர்ந்ததால், மீண்டும் சிகாகோவிற்கே விமானம் திரும்பிச் சென்று தரையிறக்கப்பட்டது.
இந்நிலையில், தற்போது இரண்டு விமானங்கள் தரையிறங்க முற்பட்டப்போது மிகவும் அருகில் வந்ததை காட்சிப்படுத்தும் காணொளி ஒன்று சமூக ஊடகங்களில் பரவலாகப் பகிரப்பட்டு வருகிறது. இதில், பீஹாரின் பகல்பூர் சர்வதேச விமான நிலையத்தில் ஏற்படவிருந்த பெரும் விமான விபத்து தவிர்க்கப்பட்டது என்று கூறப்படுகிறது.
இந்த காணொளியில் இருக்கும் தகவல் என்னவென்றால், "நடு வானத்தில் மோதல் - பகல்பூர் சர்வதேச விமான நிலையத்தில் இரண்டு விமானங்கள் தரையிறங்க போட்டியிடுகின்றன!"
பதிவின் தரப்பு: "பகல்பூர் சர்வதேச விமான நிலையத்தில், எப்போதும் வழக்கமான ஒரு நாளில், இரண்டு விமானங்கள் சுல்தான்கஞ்ச் அகுவானி பாலம் அருகே தரையிறங்க நட்பாக சிறிய மோதலில் ஈடுபட்டன," என ‘bhagalpurairport’ என்ற இன்ஸ்டாகிராம் பயனர் தனது சமூக ஊடக கணக்கில் ஒரு காணொளியை பகிர்ந்துள்ளார்.
இது தொடர்பாக வைரலான காணொளியின் இணைப்பு இங்கே
அத்தகவலை மேலும் விவரமாக பதிவிடும் தரவுப்படம் இங்கே
உண்மை சரிப்பார்ப்பு:
தெலுங்கு போஸ்ட் உண்மை சரிப்பார்ப்பு குழு சார்பில் இந்த தகவலை ஆய்வுச் செய்தப்போது, சமூக ஊடகங்களில் பகல்பூர் சர்வதேச விமான நிலையத்தில் இரண்டு விமானங்கள் மோதலைத் தவிர்த்ததாக பரவும் தகவல் தவறானது என்பதை கண்டுபிடித்தது.
இந்த ஆய்வின் தொடக்கமாக, உண்மையில் காணொளியில் குறிப்பிட்ட விமான நிலையம் பகல்பூரில் உள்ளதா என்பதை உறுதிப்படுத்த விரும்பினோம். தேவையான முக்கிய வார்த்தைகளைக் கொண்டு தேடியபோது, Times of India நாளிதழில் 27 பிப்ரவரி 2025 அன்று வெளியான செய்தி ஒன்றில், இந்திய விமான நிலைய ஆணையம் (AAI) பகல்பூரில் புதிய பசுமைவெளி விமான நிலையம் அமைப்பதற்கான சாத்தியக்கூறுகளை ஆய்வு செய்ய நிபுணர் குழு ஒன்றினை அனுப்பியுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும் அந்த செய்தியில், சுல்தான்கஞ்சில் 855 ஏக்கர் மற்றும் கோரடிஹில் 660 ஏக்கர் நிலங்கள் பரிசீலனையில் உள்ளன என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. கூடுதலாக சிறிய விமானங்களுக்கு பகல்பூரின் பழைய ‘சீரோ மைல்’ விமான நிலையத்தை திருத்தும் திட்டம் உள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த தகவலாய்வில் கூகும் தேடலில் முக்கிய வார்த்தைகளை கொண்டு தேடியபோது, பட்னா எக்ஸ்பிரஸ் 30 ஜனவரி 2025 அன்று வெளியிட்ட செய்தியில், "பகல்பூர் விமான நிலையத்திற்கு புதிய ரன் வே கிடைக்கிறது... மார்ச் மாதத்தில் இது தொடர்பான வேலை தொடங்கும்" என்று தலைப்பிடப்பட்டுள்ளது.
தொடர்ந்து அந்த செய்தி பதிவில்,
பகல்பூர் விமான நிலையம் கட்டமைப்பு மேம்பாட்டிற்காக சாலை போக்குவரத்து துறை (RCD) ₹4 கோடி ஒப்பந்தத்தை ‘Devpura Infra Construction Private Limited’ என்ற நிறுவனத்துடன் கையெழுத்தாகி உள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
அதுமட்டுமல்லாமல் புதிய விமான ஓடும் தளம் கட்டுமான வேலை மார்ச் 2025ல் தொடங்கும் என்றும், அது மூன்று மாதங்களில் நிறைவடையத் திட்டமிடப்பட்டுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதனைத் தொடந்து கூகுள் ரிவர்ஸ் இமேஜ் தேடலில் ஆய்வு செய்தப்போது, பகல்பூரில் தற்போது எந்த விமான நிலையமும் செயல்பாட்டில் இல்லை, ஆனால் எதிர்காலத்தில் ஒரு உள்நாட்டு விமான நிலையம் உருவாக்கப்பட திட்டம் உள்ளது எனும் தகவலும் இடம்பெற்றுள்ளது.
இதன் மூலம், Demolition World என்ற YouTube சேனலில் 13 ஜனவரி 2025 அன்று பதிவேற்றப்பட்ட காணொளியுடன் ஒத்துப்போவதை காண முடிந்தது.
நாங்கள் அந்த காணொளியில் குறிப்பிட்டுள்ள விளக்கத்தில் உள்ள ஒரு அங்கீகார குறிப்பை (disclaimer) கவனித்து பார்த்தோம். அதில் கூறப்பட்டுள்ளது:
"மறுப்பு:- நான் ஒரு பைலட் அல்ல, அல்லது விமானம் தொடர்பான நிபுணர் அல்ல. இது "GTA 5" வீடியோ கேம் மூலம் உருவாக்கப்பட்ட பொழுதுபோக்கு காணொளி மட்டுமே. உண்மையான நிகழ்வுகளுடன் இதில் ஒற்றுமை இருந்தாலும், அவை முற்றிலும் தற்செயலானது. அதனை காண்பவர்கள் அவதானமாக இருக்க வேண்டியது அவசியம்."
இந்த யூ டியுப் சேனலான Grand Theft Auto V (GTA 5) தொடர்பான பல காணொளிகளை பார்க்க முடிந்தது. இந்த காணொளிகள் மிகவும் அபாரமான விமான இயக்கங்களை (flight maneuvers) கொண்டதாகவும், நம்பமுடியாத மெய்ப்பொருத்தமான (realistic) சாகசங்களை (simulations) மற்றும் சுவாரஸ்யமான கற்பனைச் சிந்தனைகளை (creative scenarios) கொண்டதாகவும் இருக்கின்றன.
முடிவு : இதன்மூலம் மேற்கொண்ட விசாரணையும் ஊடகச் செய்தி அறிக்கைகளையும் பார்க்கும்போது, இந்த வைரல் காணொளியில் காணப்படும் விமான விபத்து உண்மையானது அல்ல என்பதைக் கண்டறிந்தோம். இந்த காணொளி GTA (Grand Theft Auto) விளையாட்டின் ஒரு தொகுப்பாகும். எனவே, இந்த குற்றச்சாட்டானது வெறும் தவறான தகவல் அடங்கிய கட்டுகதையே. இதனை யாரும் நம்ப வேண்டாம்.