மெட்ரோ ரயில் நிலையத்தில் குழந்தை கடத்தல் என பரவும் காணொளி! உண்மை என்ன ?

குழந்தைகள் கடத்தல் அதிகரிப்பதாக பரவும் காணொளி;

Update: 2025-03-28 07:04 GMT
மெட்ரோ ரயில் நிலையத்தில் குழந்தை கடத்தல் என பரவும் காணொளி! உண்மை என்ன ?
  • whatsapp icon

 

உண்மை சரிப்பார்ப்பு : ராஜீவ் சோக் மெட்ரோ நிலையத்தில் குழந்தை கடத்தல் காணொளி - சித்தரித்து உருவாக்கப்பட்ட காணொளியினை உண்மை என்று பரப்புக்கின்றனர்.


கடந்த மார்ச் 14, 2025 அன்று ஜெய்ப்பூர் ரயில்வே நிலையத்தில் 4 வயது சிறுவனை கடத்தியதாகக் கூறப்படும் தம்பதியினர் தொடர்பான கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சி சமூக வலைதளங்களில் வேகமாக பரவியது. இந்த தகவல் கிடைத்தவுடன், காவல்துறை ரயில் நிலையத்தில் உள்ள கண்காணிப்பு கேமராக்களின் காட்சிகளை ஆய்வு செய்தனர். அதன்பிறகு, ராஜஸ்தானின் டௌசா மாவட்டம், மகுவா பகுதியிலிருந்து அந்த தம்பதியினரை கைது செய்தனர்.


கடந்த மாதம், டெல்லி காவல்துறையினர் நான்கு பேர் அடங்கிய குழுவினை, இதில் மூன்று பெண்களும் அடக்கம், புதுடெல்லி தொடர்வண்டி நிலையத்தில் இருந்து மூன்று குழந்தைகளை கடத்தியதற்கும், மாநிலத் தலைநகரில் குழந்தை கடத்தல் கும்பலுடன் தொடர்பு கொண்டிருந்ததற்கும் கைது செய்தனர். பின்னர், காவல்துறையினர் கடத்தக் காரர்களை பின்தொடர்ந்து ஒரு கைக் குழந்தை உட்பட கடத்தப்பட்ட இரு குழந்தைகளை மீட்டனர்.

குழந்தைகள் கடத்தல் அதிகரித்துள்ள நிலையில், ஒரு தொடர்வண்டி நிலையத்தில் குழந்தை கடத்தப்பட்டதாக கூறப்படும் காணொளி சமூக வலைதளங்களில் பரவலாக பகிரப்பட்டு வருகிறது. இதில், "ராஜீவ் சாக் மெட்ரோ நிலையத்தில் நன்பகல் நேரத்திலேயே குழந்தை கடத்தப்பட்டுவிட்டது" எனக் கூறப்படுகிறது.


இந்த குழந்தைகள் கடத்தல் தொடர்பாக சமூக வலைதளங்களில் பல்வேறு செய்திகள் பரவி வருகிறது. X (முன்னாள் Twitter) சமூக ஊடகத்தில் மைக்கிரோப்ளாக் தளத்தில் வைரலாகியுள்ள இந்த பதிவில் "Kripya apne bachchon ko pal bhar ke liye bhi nazar se duur naa karen.. In jese darinde apko har jagah milenge." (தயவுசெய்து உங்கள் குழந்தைகளை கண் புரளா விட்டாலும் விடாதீர்கள். குழந்தை கடத்தலாளிகள் எங்கும் இருக்கிறார்கள்) என குறிப்பிடப்பட்டுள்ளது.

சமூக வலைதளங்களில் பரவி வரும் தவறான தகவல்

X (முன்னாள் Twitter) மைக்கிரோப்ளாக் தளத்தில் வைரலாகியுள்ள இந்த பதிவில் "Kripya apne bachchon ko pal bhar ke liye bhi nazar se duur naa karen.. In jese darinde apko har jagah milenge." (தயவுசெய்து உங்கள் குழந்தைகளை கண் படாத இடங்களிலும் தனியாக விடாதீர்கள். குழந்தை கடத்தல்காரர்கள் எங்கும் இருக்கிறார்கள்) என குறிப்பிடப்பட்டுள்ளது.


பரவி வரும் காணொளிக்கான இணைப்பு இங்கே

Full View




இத்தகவல் குறித்த வைரல் பதிவின் தரவுப்படம்


உண்மை சரிப்பார்ப்பு:


குழந்தைகள் கடத்தல் குறித்த பல்வேறு நேரங்களில் வேவ்வேறு இடங்களில் நிகழ்வதாக சமூக ஊடகங்களில் அவ்வப்பப்போது பரப்பப்படுகிறது. இதனால் மக்கள் அச்சத்தில் குழந்தைகளை பல இடங்களுக்கு செல்ல தடை விதிக்கின்றனர். மேலும் இதனால் முகம் தெரியாத நபர்கள் ஊருக்குள் வரும்போது ஒரு பதற்றம், வன்முறைச் சம்பவங்கள் நடக்க வழிவகுக்கின்றது.

இதேமாதிரி ஒரு காட்சி தற்போது சமூக வலைத்தளத்தில் பரப்படுகிறது. இதன் முக்கியத்துவத்தை உணார்ந்து இத்தகவலை தெலுங்குபோஸ்ட் உண்மைச் சரிப்பார்ப்பு குழு ஆய்வு செய்தது.

இது ஒரு திரைக்கதைக்காக சித்தரிக்கக் காட்சியாக இருப்பது கண்டறியப்பட்டது.


அண்மையில் பரவிய காணொளியினை ஆய்வு செய்யும் நோக்கத்தில், அதன் முக்கிய காட்சிகளை சிறுசிறு பகுதிகளாக பிரித்தெடுத்து, புகைப்படமாக பதிவிட்டு Google Reverse Image Search கருவியில் தேடிய போது, இன்ஸ்டாகிராமில் 2025 மார்ச் 23 ஆம் தேதி வெளியான ஒரு பதிவை கண்டுபிடிக்கப்பட்டது.


இதன் தொழில்நுட்ப தரம் கொண்ட காணொளி ஒன்றினை இன்ஸ்டாகிராம் சமூக ஊடக கணக்கு பதிவில் கிடைத்தது. அப்பதிவில் இந்தி மொழியில்,

"दिल्ली मेट्रो राजीव चौक की घटना 😱🙏" இவ்வாறு பதிவிட்டு இருந்தது.




 

அதன் விளக்கம் : டெல்லி மெட்ரோ ராஜீவ் சாக் நிலையத்தில் நிகழ்ந்த சம்பவம்


இதே போல் மற்றொரு காணொளி மார்ச் 19, 2025 அன்று ராஜ் தாகூர் என்பவர் தனது முகநூல் கணக்கில் பதிவிட்டுள்ளார்:

Full View


இந்த காணொளி யூ டியூப் ஷாட்ஸ் ஆகவும் கூட பகிரப்பட்டிருக்கிறது. அதன் விவரத்தினை இங்கே காணலாம்

Full View

இதன் உண்மையான மூலப் பதிவில் , ராஜ் தாகூர் என்பவர் டெல்லியைச் சேர்ந்தவர். அவரது ஆர்வம் மற்றும் தொழில் காணொளிகளை உருவாக்குவது தொடர்புடியதாக இருந்தது. அவர் பல்வேறு சமூக வலைதளங்களில் இதுபோன்ற எழுத்தாக்கம் செய்து திட்டமிட்டு உருவாக்கப்பட்ட காணொளிகளைப் பகிர்ந்து வந்துள்ளார்.

அவரின் தனிப்பட்ட விவரங்களின் தரவுப்படம்


இதற்கு முன்னதாக, தெலுங்குபோஸ்ட் உண்மை சரிப்பார்ப்பு மலையாளக் குழு ஒரு இஸ்லாமிய ஆண் தனது மகளை திருமணம் செய்துகொண்டதாக கூறப்பட்ட ஒரு சித்தரிக்கப்பட்ட காட்சிப்படுத்தப்பட்ட காணொளியினை தவறானது என ஆய்வில் உறுதி செய்தது.

மேலும் குழந்தைகள் கடத்தல் தொடர்பான மேற்கொண்ட விசாரணை மற்றும் காணொளி உருவாக்கியவரின் சமூக வலைதள பதிவுகளின் அடிப்படையில், இந்த குழந்தை கடத்தல் சம்பவம் சித்தரிக்கப்பட்ட காட்சி என்பதை தெலுங்குபோஸ்ட் குழு உறுதிசெய்தது. எனவே, இந்தப் பதிவு முற்றிலும் தவறானது.


Claim :  குழந்தைகள் கடத்தல் அதிகரிப்பதாக பரவும் காணொளி
Claimed By :  Social media users
Fact Check :  False
Tags:    

Similar News