க்ரோக்’ வெளியிட்ட செய்தியால் பா.ஜ.கவினர் கண்டனமா – உண்மை என்ன?

க்ரோக் சாட்பாட்டிற்கு பா.ஜ.க தமிழக தலைவர் அண்ணாமலை கண்டனம்;

Update: 2025-03-28 17:22 GMT
க்ரோக்’ வெளியிட்ட செய்தியால் பா.ஜ.கவினர் கண்டனமா – உண்மை என்ன?
  • whatsapp icon

உண்மை சரிப்பார்ப்பு : சமூக ஊடகங்களில் க்ரோக் சாட்பாட்டிற்கு பா.ஜ.க தமிழக தலைவர் அண்ணாமலை கண்டனம் தெரிவிக்கவில்லை. மாற்றியமைக்கப்பட்ட புகைப்படம் கொண்டு தவறான தகவல் பரப்பப்படுகிறது.


எலான் மஸ்கின் சமூக ஊடக தளமான X-ல் செயல்படும் AI சாட்பாட் செயலி ‘க்ரோக்’ (Grok), அதன் எதிர்மறை மற்றும் திடுக்கிடும் பதில்களால் இந்தியாவில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. OpenAI, ChatGPT, DeepSeek போன்ற எ.ஐ சேட்பாட்களிலிருந்து மாறுபட்டு, ‘க்ரோக்’ எதையும் மறைக்காமல், நேரடி மற்றும் வழக்கத்திற்கு புறம்பான மொழிநடையைப் பயன்படுத்துவதால் பெரும் கவனத்தை பெற்றுள்ளது.


ஒரு பயனர் “பாஜகவின் அண்ணாமலை சொல்லிய பொய்களை பட்டியலிடு” என்று கேட்டபோது, அதற்கு பதிலளித்த ‘க்ரோக்’ தமிழ்நாடு பாஜக தலைவர் கே.அண்ணாமலை பல கருத்துக்களை தெரிவித்திருக்கிறார். அதில் பெரும்பாலும் மற்றவர்கள் மறுத்து அல்லது தவறான தகவல் என கருதப்பட்டிருப்பதாகவும், அதிலும் முக்கியமாக ஐந்து சம்பவங்களை க்ரோக் பட்டியலிட்டது.


இந்நிலையில் ‘க்ரோக்’-ன் கருத்துக்களுக்கு எதிராக சிலர் அண்ணாமலையின் படத்துடன் “Go Back Grok” என்ற வாசகம் காணப்படும் ஒரு படத்தை பகிர்ந்து வருகின்றனர். இதை பார்த்த சிலர், பாஜக தலைவர் AI சாட்பாட்டின் விமர்சனங்களை தாங்க முடியாமல் எதிர்ப்பு தெரிவிப்பதாக கருத்து தெரிவித்துள்ளனர்.


தற்போது X- தளத்தில் பரவியுள்ள ஒரு வைரல் பதிவில், “பா.ஜ.க. தொண்டர்களின் முகச் சித்ரம். ஒவ்வொருவருக்கும் தந்தை இருக்க வேண்டும் என்பதை அவர்கள் புரிந்து கொள்ள வேண்டும். ‘X’-ல் இருக்கும் ‘க்ரோக்’ தான் உங்களுக்கெல்லாம் தந்தை” என்று எழுதப்பட்டுள்ளது.


இந்த பதிவின் கூற்று குறித்த முழு விவரத்தினை இங்கே காணலாம்







 

வைரலாகும் பதிவின் தரவுப்படம்


உண்மை சரிப்பார்ப்பு:


சமூக ஊடகங்களில் பரவும் புகைப்படம் ஒன்றில் அண்ணாமலை அவர்கள் “Go Back Grok” என்ற வாசகம் எழுதப்பட்டிருந்த பலகையினை கையினில் வைத்திருப்பது போன்றுள்ளது. இந்த புகைப்படம் உண்மையா என்பதை அறிந்துகொள்ள தெலுங்கு போஸ்ட் உண்மைச் சரிபார்ப்பு குழு தகவலாய்வு செய்தது. இந்தப் படம் மாற்றியமைக்கப்பட்டு சமூக வலைத்தளத்தில் தவறான தகவலுடன் பரப்பப் படுவதை கண்டறிந்தோம்.


‘க்ரோக்’ இந்தியாவில் டிசம்பர் மாதம் 2023 ஆம் ஆண்டில் அறிமுகமானது. ஆனால், பாஜக தலைவர் அண்ணாமலை குறித்த கேள்விகளுக்கு அதன் நேரடி பதில்கள் அண்மைக் காலத்தில்தான் அதிகளவில் அரசியல் வட்டாரத்தில் கவனம் பெற்றுள்ளன.


இந்நிலையில் சமூக ஊடகப் பதிவிலுள்ள கூற்றினை ஆய்வுச் செய்யும் நோக்கத்தில், வைரல் புகைப்படத்தை ‘கூகுள் ரிவர்ஸ் இமேஜ் தேடல்’ மூலம் ஆய்வு செய்தபோது, இது ஏற்கனவே டிசம்பர் 26, 2024 முதல் இணையத்தில் இருந்த ஒரு படத்தின் மாற்றியமைக்கப்பட்ட பதிப்பாக இருப்பதை காண முடிந்தது.

இதுதொடர்பாக முகநூல் பதிவினை இங்கே காணலாம்


Full View


மேலும், அந்த மூலப் புகைப்படம் பதிவிடப்பட்ட அதே நேரத்தில் வெளிவந்த சில ஆங்கில செய்திக் கட்டுரைகளும் கிடைத்தன. அதில் New Indian Express எனும் செய்தி நிறுவனம் வெளியிட்ட தகவலின்படி, “தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை, அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை என்ற விவகாரத்தில், காவல்துறையினர் மாணவியின் அடையாளத்தை FIR-ல் வெளிப்படுத்தி, பொது வெளியில் தெரியும்படி செய்ததற்கு எதிராக கடும் விமர்சனம் தெரிவித்துள்ளார்” என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அவரது எதிர்ப்பை வெளிப்படுத்தும் வகையில், 2024 டிசம்பர் 27ம் தேதி காலை 10 மணிக்கு தன் வீட்டின் முன்பாக தானாகவே தன்னை சாட்டையால் அடிக்க முற்பட்டதாகவும் அந்த செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.



அந்த கட்டுரையில் சேர்க்கப்பட்ட புகைப்படத்தில், அண்ணாமலை பிடித்திருந்த பதாகையில் “#ShameOnYouStalin” என்ற வாசகம் காணப்பட்டது. இந்த வைரல் புகைப்படத்தில் உள்ள “Go Back Grok” வாசகத்திலிருந்து அது மாறுபட்டுள்ளது என்பதை காணலாம்.




 

இதற்கிடையில் நியூஸ்18 தொலைகாட்சி வெளியிட்ட செய்தியில், தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை, அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை வழக்கில் காவல்துறையினர் முதல் தகவல் படிவத்தின் விவரங்களை பொது வெளியில் கசியவிட்டு, மாணவியின் அடையாளத் தகவல்களை வெளிப்படுத்தியதாக குற்றம் சாட்டினார்.


அந்த செய்தியில் இடம்பெற்றப் புகைப்படத்தையும் இந்த பதிவிற்கு ஒத்த படத்தோடு காணலாம். மேலும் அது பாஜக தலைவரின் X கணக்கிலிருந்து பெறப்பட்டது. எனவே, அந்த புகைப்படத்தைக் கண்டுபிடிக்க, அண்ணாமலை தனது X கணக்கில் வெளியிட்ட பதிவுகளை ஆய்வு செய்தோம். அதில், அவர் #ShameOnYouStalin என்ற ஹாஷ் டேக்யுடன், அதே வாசகம் காணப்படும் பதாகையுடன் தான் இருக்கும் புகைப்படத்தையும் பகிர்ந்துள்ளார். அந்த பதிவில், தமிழ்நாடு முதல்வர் எம்.கே.ஸ்டாலின், மக்களின் குரலை ஒடுக்கிவிட்டு, ஊடகங்களை பயன்படுத்தி பொது மக்களின் கோபத்தைக் குறைக்க முயற்சிக்கிறார் என்று அண்ணாமலை குற்றம்சாட்டியுள்ளார்.


இத்தகவல் அடங்கிய பதிவின் விவரம் இங்கே



மக்களின் எளிதான ஒப்பீட்டிற்காக, மாற்றம் செய்யப்பட்ட புகைப்படம் மற்றும் அசல் புகைப்படத்தை இணைத்து இங்கு பதிவிட்டுள்ளோம்.




முடிவு : மேற்கண்ட தகவல் ஆய்வுகளையும் ஊடகச் செய்திகளையும் கருத்தில் கொண்டால், அண்ணாமலை 'Grok' சேட்பாட் எதிராக போராட்டம் நடத்தியதாக பரவும் புகைப்படம் மாற்றம் செய்யப்பட்டது என்பது உறுதியாக தெரிகிறது. மாற்றம் செய்யப்பட்ட பதாகையில் வாசகம் மாற்றப்பட்டு பயன்படுத்தப்பட்டதால், இந்த தகவல் தவறானதாகும். இதுபோன்ற தவறாக வழிநடத்தும் தகவல்களை நம்ப வேண்டாம்.

Claim :  க்ரோக் சாட்பாட்டிற்கு பா.ஜ.க தமிழக தலைவர் அண்ணாமலை கண்டனம்
Claimed By :  Social media users
Fact Check :  Misleading
Tags:    

Similar News